- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மன பயம் நீங்கும். தேவையற்ற பதட்டங்கள் விலகும். உங்கள் மேல் எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து விடுவீர்கள். தேவையில்லாத குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவந்து, புத்துணர்ச்சியோடு உங்களுடைய நாளை கடந்து செல்வீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த சுகமான நாளாக இருக்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாடு செய்வது மன அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நல்லபடியாக நடந்து முடியும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. அவசர தேவைகளை பூர்த்தி செய்ய, தக்க சமயத்தில் பணம் கையை வந்து சேரும். வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்து, மன நிம்மதி அடைவீர்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சீராக நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை நிறைவாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடை விலகும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை புதிய முதலீடுகள் செய்யலாம். லாபம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். பயணங்களின் போது கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய நடவடிக்கைகள் சீராக இருக்கும். அதிக கோபமும் வராது. அதிகமான பொறுமையும் இருக்காது. எல்லா சூழ்நிலையையும் சீராக எதிர்கொள்ளும் பக்குவம் உங்களிடத்தில் வெளிப்படும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகளை சமாளிக்க முடியாது. நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீங்க. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். பிரச்சனைகள் வந்து போகும். இருந்தாலும் உங்களுடைய திறமையால், வரக்கூடிய பிரச்சனையையும் சிக்கலையும் சாதுரியமாக சமாளிப்பீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். இந்த நாள் இறுதியில் உங்களாலேயே, உங்கள் திறமையை நம்ப முடியாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் சந்தோஷம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் கை கூடிவரும். மனதில் பிடித்த நபரை கரம் பிடிப்பீர்கள். சந்தோஷத்திற்கு அளவிருக்காது. சுப செலவுகள் ஏற்படும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சொன்ன வேலையை சொன்ன நேரத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்து விடுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. குடும்ப விஷயத்தில் நிதானம் தேவை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். உற்றார் உறவினர்களோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, தாய்நாடு வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். பிரயாணம் இனிதே அமையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். உடல் சோர்வினால் வேலையில் சின்ன பின்னடைவு வரலாம். ஆனால் பெருசாக பாதிப்பு இருக்காது. ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள் நல்லதே நடக்கும்.

சற்று முன்