வரவு செலவு கணக்கு எழுதும் நோட்டுப் புத்தகத்தில் இத வச்சு பாருங்க! வரவுகள் அதிகரித்து செலவுகள் நிச்சயம் குறையும்!

puthan-5-rupee-note

தொழில், வீடு, கடை, வியாபாரம் என்று எந்த இடத்தில் நாம் செய்யும் செலவுகளும் முதலில் முறையாக எழுதி வைக்க வேண்டும் என்பது முக்கியம். வரவு செலவு கணக்கை எழுதி வைக்காதவர்களிடத்தில் பணமானது தண்ணீர் போல கரைந்து கொண்டே இருக்குமாம்! ஆனால் வரவு செலவு எழுதி வைப்பவர்கள் கஞ்சத்தனமாக இருக்கவும் கூடாது. அதே சமயத்தில் செய்யும் செலவுகளை திட்டமிட்டும் எழுதி வைத்து செலவு செய்ய வேண்டும். அத்தகைய நோட்டு புத்தகத்தில் இந்த ஒரு விஷயத்தை வைக்கும் பொழுது செலவானது குறைந்து வரவானது பெருகும் என்பது நம்பிக்கை! அப்படி நாம் அதில் என்னதான் வைக்க வேண்டும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

வரவு செலவு கணக்கு எழுதும் நோட்டு புத்தகம் அனைவரிடமும் இருக்க வேண்டும். பௌர்ணமி தினங்களில் அந்த புத்தகத்திற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு கற்பூர தீப ஆராதனை காண்பிக்க வேண்டும். எப்பொழுதும் அந்த இடத்தில் வாசனை மிக்க மல்லிகை மலர்கள் மற்றும் பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்றவற்றை போட்டு வைக்க வேண்டும். பணம் இருக்கும் இடத்திலும் வரவு செலவு கணக்கு புத்தகத்தில் வாசமுள்ள பொருட்களை போட்டு வைக்கும் பொழுது பணத்தை மென்மேலும் ஈர்த்து கொடுக்கும் என்பது பண ஈர்ப்பு விதிகளில் ஒன்று.

நீங்கள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் மட்டும் போதாது அதை எப்படி தக்க வைத்துக் கொள்வது? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல எப்படியாவது முன்னேறி விட மாட்டோமா? என்று நினைக்கும் பலருக்கும் பணத்தை தக்க வைத்துக் கொள்ளும் சூட்சமத்தை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். வாசம் உள்ள இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வது ஐதீகம். எனவே வரவு-செலவு கணக்கு புத்தகம் வைக்கும் பொழுது அதனுடன் இத்தகைய வாசனை மிகுந்த பொருட்களையும் சேர்த்து வைப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

puthan

மேலும் அதில் தொடர்ந்து வரவு செலவுகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது செலவுகள் அதிகரித்து காணப்பட்டால் உடனே இந்த பரிகாரத்தை செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும். வரவு மற்றும் செலவு இரண்டையும் சரிசமமாக கொண்டு செல்ல வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகளை தவிர்க்க புத பகவானை வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்கும் புத பகவான் வழிபாடு பலரும் செய்வது இல்லை.

நவகிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் புத பகவானை வழிபட வருமானமானது பெருகும் என்பது ஜோதிட நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு உகந்த நிறமாக இருக்கும் பச்சை நிறத்தை அடிக்கடி பயன்படுத்துவது நல்லது. வரவு செலவு கணக்கு எழுத பயன்படுத்தும் நோட்டுப் புத்தகத்தில் பச்சை நிற 5 ரூபாய் நோட்டு வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும். அதாவது பச்சை நிறத்தில் இருக்கும் ரூபாய் நோட்டு வைப்பது அதிர்ஷ்டம் தரும் அது எங்கு கிடைக்கும்? பழைய ஐந்து ரூபாய் நோட்டுகள் பச்சை நிறத்தில் இருக்கும்.

5-rupee-note

இந்த நோட்டுகளை நீங்கள் வரவு செலவு கணக்கு எழுதும் புத்தகத்தில் ஏதாவது ஒரு பத்தியில் மறைத்து வைத்து விடுங்கள். நிச்சயம் நல்ல ஒரு முன்னேற்றத்தை நீங்களே காணலாம். அதுமட்டுமில்லாமல் பச்சை குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்வது, பூஜை அறையில் வைத்துக் கொள்வது பச்சை நிறப் பேனா பயன்படுத்துவது போன்ற விஷயங்களை செய்யும் பொழுதும் புதனுடைய அருள் கிடைத்து தொழில், வியாபார விருத்தி பெருகும்.