பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க, உங்கள் கையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டால் போதும்..

அத்தியாவசிய தேவையில் முதலிடம் பிடித்திருப்பது இந்த பணம்தான். பணம் இல்லை எழுந்தால் யாராலும் வாழ்ந்துவிட முடியாது. பணம் மட்டும் இருந்தாலும் யாராலும் வாழ்ந்து விட முடியாது. ஒருவரது வாழ்க்கையில் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்த அளவிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, அளவுக்கு அதிகமான ஆசையும் பணத்தின் மேல் வைக்கக்கூடாது. ஆசையே இல்லாமலும் இருக்கக்கூடாது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும், இது கட்டாயம் தேவையான அறிவுரை. இதை மனதில் வைத்துக்கொண்டு பணத்தை சேமிக்க பழகுங்கள். வாழ்க்கையில் பிரச்சனை வராமல் தப்பித்துக் கொள்ளலாம். நம் கையில் தேவைக்கு அதிகமாக சேமிப்பு இருப்பை வைத்துக் கொண்டு இருக்கிறோமோ இல்லையோ, ஆனால் தேவைக்கு ஏற்றவாறு பணம் வருவதும் போவதுமாக இருந்தால்கூட வாழ்க்கையை சமாளித்துவிடலாம். கையில் சுத்தமாக ஒரு ரூபாய்கூட இல்லை என்ற தட்டுப்பாடு வராமலிருக்க என்ன செய்யலாம்? பணம், செல்ல வேண்டும். வரவேண்டும். செல்ல வேண்டும். திரும்பவும் நம் கைக்கு வரவேண்டும். இந்த சுழற்சி நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? என்பதற்கான தீர்வு பற்றிய பதிவுதான் இது.

money bag

முதலில் ஒரு சிறிய அளவு பச்சை பட்டு துணியையும், ஒரு பாதாம் பருப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பாதாமை பச்சை துணியில் ஒரு நூல் கொண்டு சிறிய முடிச்சாக கட்டி, உங்களது சட்டைப் பையிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைத்துக் கொள்ளலாம். பச்சை துணி கொண்டு பாதாமை முடிச்சாக கட்டும் அந்த நேரம் புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிகுள் கட்டிக் கொள்ளலாம் அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை கட்டிக்கொள்ள வேண்டும். கட்டாயம் இந்த முடிச்சு, இந்தக் கிழமையில், இந்த நேரத்தில்தான் கட்ட வேண்டுமே தவிர மற்ற நேரங்களில் கட்டினால் பலனளிக்காது.

முடிச்சின் உள்ளிருக்கும் பாதாமை மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றும் சமயத்தில் பச்சை துணியை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாதாம் முடிச்சை  கட்டாயமாக கருநீல பர்ஸ், கருப்பு பர்ஸ், தோல் பர்ஸ், இவைகளில் வைக்கக்கூடாது. இவை அல்லாத மற்ற பர்ஸ்களிலும் வைத்துக் கொள்ளலாம். உங்களிடம் பணவரவு நிரந்தரமாக வந்து தங்குகிறதோ இல்லையோ! கையில் செலவுக்கு பணம் இல்லாமல் கட்டாயமாக இருக்கவே இருக்காது. பாதாமும் பச்சை நிறத்துணியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி கலாட்சியம் என்றுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Badam benefits in Tamil

இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நம் தொழிலுக்கு பண தட்டுப்பாடு ஏற்படாது. கடன் தொல்லையும் வராது. நம்முடைய வாழ்க்கையை பெரிய கஷ்டங்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள சின்ன பரிகாரம் தான் இது. இந்த இரண்டு பொருட்களை உங்களது சட்டைப் பையிலோ அல்லது பணப்பெட்டியிலோ வைப்பதன் மூலம் கட்டாயம் எந்த பிரச்சனையும் வராது. பணம் வருகிறதா என்பதை சோதித்துப் பார்ப்பதில் எதற்கு தாமதம். நம்பிக்கையோடு செய்து தான் பார்ப்போமே. நல்ல பலன் கிடைக்கிறதா என்பதை.

இதையும் படிக்கலாமே
வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டுமா? சுலபமான பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pana varavu athikarikka in Tamil. Panam athigam vara Tamil. Panam athikarikka Tamil. Panam eerpu vidhi. Panam peruga valigal Tamil.