வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டுமா? சுலபமான பரிகாரம்.

marraige-guru

ஒரு வீட்டில் கணவன் மனைவி சண்டை என்றால், அந்த பிரச்சனை குறிப்பிட்ட இரண்டு நபரை மட்டும் பாதிக்காது. அந்த தம்பதியரின் குழந்தையையும், குடும்பத்தை சுற்றி உள்ள உறவுகளையும் பாதிக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி சண்டை போட்டு பிரித்து விட்டால் அவர்களது குழந்தைகளுக்கு, இந்த சமுதாயத்தில் கிடைக்கக்கூடிய அங்கீகாரம் கட்டாயமாக கிடைக்காது. கணவன் மனைவி பிரச்சினைக்கு இடையில் சிக்க போவது அவர்களின் குழந்தைகள் தான். அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை தடம் மாறி போக அதிக வாய்ப்பு உள்ளது. எத்தனை பேர் இதை சிந்தித்து இருப்பார்கள்? அப்படி யோசித்து இருந்தால் தான் பிரச்சினையே வராதே! உங்களது குடும்பத்திற்கு கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி, நிம்மதி இவைகள் எதுவும் கிடைக்காமல் போவதற்கு உங்களது பிடிவாதமும், சண்டையும் தான் காரணமாக இருக்கின்றது என்பதை உணர்ந்து விட்டுக்கொடுத்து சென்றாலே பிரச்சனையில் பாதி தீர்ந்துவிடும். என்ன செய்வது? விட்டுக் கொடுப்பது என்றாலும், யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்ற பிரச்சனை வரும். ‘நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள். அதிபுத்திசாலி யாரோ அவர்தான் முதலில் விட்டுக் கொடுப்பார் என்பது ஒரு ரகசிய உண்மை.’ இந்த ரகசிய உண்மையை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். சரி. கணவன் மனைவியின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

couples

முதலில் ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பச்சரிசி 2 கைப்பிடி அளவு, சிறிதளவு மஞ்சள்தூள், ஒரு கைப்பிடி அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தட்டை தயார் செய்யும்போது யார் இருவர் ஒன்றாக சேர வேண்டுமோ அவர்களின் பெயரை மனதார உச்சரித்துக் கொண்டு சீக்கிரம் ஒன்றுசேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இருவருக்கும் பிரச்சனை அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றது என்றால், சண்டை தீர வேண்டும் என்ற பிரார்த்தனையை மனதார செய்துகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக தீபம் ஏற்றும் திரியானது வெள்ளை நிறத்தில் இருக்கும். அந்தத் திரியுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, சில சொட்டுக்கள் தண்ணீர் விட்டு, பிசைந்து நிழலிலேயே உலர வைத்துக் கொள்ள வேண்டும். வெயிலில் காய வைக்க கூடாது. வெயிலில் வைத்தால் மறுபடியும் திரி வெளிர் நிறத்திற்கு வந்துவிடும். ஒரு மண் அகல் தீபத்தில் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மஞ்சள் திரியை போட்டு தீபமேற்ற தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

agal vilakku

அடுத்தபடியாக நாம் தயார் செய்து வைத்துள்ள தாம்பூலத் தட்டை, நம் பூஜை அறையில் வைத்து விட்டு, அதன் முன்பு மஞ்சள் திரிபோட்டு தயார் செய்த நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தையை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் என்றால் 48 நாட்களுக்குள்ளேயே நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு பிரச்சனைகள் எல்லாம் கோர்ட் வரை சென்று இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு பரிகாரத்தை தொடர்ச்சியாக செய்வது நல்ல பலன்தரும்.

- Advertisement -

poojai arai

இந்த பரிகாரத்தை சம்பந்தப்பட்ட கணவன் மனைவி தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கும் உறவினர்கள் கூட செய்யலாம். அதாவது தன் மகன், மருமகள் ஒன்றாக சேர வேண்டும் என்றும், தன் மகள் மருமகன் ஒன்றாக சேர வேண்டும் என்றும் யாருடைய தாய் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்வது தவறு இல்லை. பொதுவாகவே வீட்டில் மஞ்சள் திரி போட்டு காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவது குடும்ப ஒற்றுமைக்கு மிகவும் சிறப்பான ஒரு பரிகாரம். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து ஒற்றுமையோடு வாழ பிரார்த்தனை செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
ராஜ வாழ்க்கையை வாழ வேண்டுமா? இந்த 2 பொருட்களை சேர்த்து நீங்களே தாயத்து செய்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanavan manaivi otrumai pariharam. Kanavan manaivi pariharam Tamil. Kanavan manaivi valipadu Tamil. Kanavan manaivi otrumai Tamil.