இந்த பொருளை பர்சில் வைத்தால் உங்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்.

pursewithcash

இந்த காலத்தில் யாருக்குத்தான் அதிர்ஷ்டம் என்றால் பிடிக்காமல் இருக்கும். எவ்வளவு தான் வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருந்தாலும் சிலசமயம் அதிர்ஷ்டத்தின் பக்கம் நம் எண்ணம் திரும்புவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் அதிர்ஷ்டத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் எதிர்பார்த்துக் கொண்டுதான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களை நோக்கி அதிர்ஷ்ட மழை பொழிய வேண்டுமா? இந்த பொருளை உங்களது பர்சில் வைத்துக் கொள்ளுங்கள் போதும்.

purse

உங்களுடைய மணிபர்சில் எந்தெந்த பொருட்களை வைத்தால் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் திரும்பும் என்பதை பார்ப்போம். முதலில் நீங்கள் உபயோகப்படுத்தும் பர்ஸ் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதில் கருமை நிறம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கருமை நிற பர்ஸ்களை உபயோகிக்க வேண்டாம் அது அதிர்ஷ்டத்தை தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாக அதிர்ஷ்ட சின்னமாக கருதப்படும் ஸ்வஸ்திக் அல்லது நட்சத்திரம் இந்த சின்னங்களைக் கொண்ட பொருளை அல்லது படத்தை வைத்துக் கொள்ளலாம்.

purse

தெய்வ உருவ படங்களில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய லட்சுமிதேவி அல்லது குபேரன் படங்களை திறந்தவுடன் தெரியுமாறு வைத்துக் கொள்ளலாம். குபேர எந்திரத்தில் குறிப்பிட்ட எண்கள் இருக்கும் அதனை பரிசில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தை வரவழைக்க முடியும்.

- Advertisement -

கிராம்பு, சோம்பு, பட்டை, ஏலம், பச்சை கற்பூரம் இவை ஐந்தும் கலந்த ஒரு சிறிய மூட்டையை பர்சில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தை வரவழைக்க முடியும். இதன் வாசம் லக்ஷ்மி கடாட்சத்தை உண்டு பண்ணும்.

purse

கோமதி சக்கரம் மற்றும் சோலி இவைகளை பரிசில் வைப்பதன் மூலமும் பணத்தை ஈர்க்க முடியும். சிறிய அளவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருப்பது நல்லது.

உங்களுடைய மணி பர்சை பின் பாக்கெட்டில் வைப்பதை தவிர்த்து பாருங்கள். மேலும் எந்த விதமான சிறிய ஆயுதம் சார்ந்த பொருட்களை வைக்க கூடாது.

அரச இலையை பர்சில் வைத்தால் குறிக்கோள் வெற்றியடையும். நினைத்த செயல் வெற்றிகரமாக நிறைவேறும். மயில் இறகு வைத்து கொள்ளலாம் அதன் மூலம் மென்மையான மற்றும் அமைதியான மன நிலையில் இருக்க முடியும்.

purse

தொலைபேசி எண்களை குறிக்க அல்லது சிறிய காலண்டர் போன்றவற்றை பர்சில் வைத்து கொள்ளும் பழக்கம் இருந்தால் அவை பச்சை நிறத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். பச்சை நிறத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கிறது.

ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும் போதும் நீங்கள் வைத்திருக்கும் பார்சிலிருந்து முதலில் ஒரு சிறிய தொகையையாவது தானத்திற்கு அல்லது தெய்வத்திற்கு செலவிடுங்கள். இவை தெய்வ கடாட்சத்தை உங்கள் மீது பரப்பி அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஒரு எளிய வழியாகும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் மகாலட்சுமியின் ஸ்வரூபமான ஸ்வர்ணம் ஏன் சேரவில்லை?

English Overview:
Here we have List of things to keep in your purse. Things to keep in your purse for attract money. Attract money in your purse.