இந்த பொருளை உங்கள் படுக்கை அறையில் வைத்தால் வீட்டில் சண்டையே வராது.

mandarin-couple

பெரும்பாலான வீடுகளில் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தான் விட்டுக்கொடுத்து சென்றாலும் ஏதாவது ஒரு வகையில் சண்டை வந்துவிடும். முந்தைய காலங்களில் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக காணப்பட்டன. அங்கே சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லாமல் இருந்தது. பெண்களுக்கு எதிர்த்துப் பேசும் தைரியமும் இல்லாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் தனி குடித்தனங்கள் பெருகிவிட்டன. பெண்களுக்கு பேச்சுரிமையும் அதிகமாகிவிட்டது. உரிமைக்காக போராடிய காலம் போய் அதையே சாதகமாக பயன்படுத்தி சில பெண்கள் சின்ன சின்ன விஷயங்களைக் கூட பொறுத்துக் கொள்ளாமல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆண்களையும் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும் இன்னமும் ஆணாதிக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த இரு தரப்பினருக்கும் இடையே இருக்கும் போராட்டத்தில் பாதிக்கப்படுவது என்னவோ ஏதுமறியா குழந்தைகள் தான். பெற்றோர்கள் சண்டையிடுவதை பார்க்கும் குழந்தைகளின் மனது பாதிக்கப்படும். இதை பெற்றோர்கள் உணர்வதே கிடையாது. விட்டுக் கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை இதை இருவரும் உணர்ந்தால் மட்டுமே அந்த இல்லம் அன்பு நிறைந்த இல்லமாக, அமைதி நிறைந்த இல்லமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

scolding-each-other

கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பறவை இனம் என்றால் அன்றில் பறவை தான். அது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல மாண்டரின் பறவையும் தன் இணையை பிரிந்தால் மாண்டு விடும் தன்மை கொண்டது. மாண்டரின் உருவ பொம்மையை மேற்கத்திய நாடுகளில் தங்கள் வீடுகளில் உள்ள படுக்கையறையில் வைத்துக் கொள்கின்றனர். இந்தப் பொருளை படுக்கை அறையில் வைப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வராது என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது.

அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவலாக காணப்படும் மாண்டரின் பறவை உலகிலேயே மிகவும் அழகான ஒரு பறவை இனமாகும். இவை வாத்து இனத்தை சார்ந்த ஒரு பறவை. மாண்டரின் பறவையை ‘மரப்பறவை’ என்றும் கூறுகின்றனர். இதனுடைய இறகுகள் வண்ணங்கள் பலவற்றை கொண்டு காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது. ஆண் பறவை அதிக வண்ணங்களை கொண்டும், பெண் பறவை புள்ளிகளைக் கொண்டும் இருக்கும். ஒன்றையொன்று எப்போதும் ஓட்டிக்கொண்டே திரியும். தங்கள் எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கு உயரமான மர பொந்துகளில் வசிக்கின்றன. தன் இணையை பிரிந்த மாண்டரின் பறவை தண்ணீரிலேயே தன் இணைக்காக காத்துக் கொண்டிருக்குமாம். எவ்வளவு நாட்கள் ஆனாலும் இறை தேடுவதில் நாட்டமில்லாமல் தன் இணைக்காக காத்துக் கொண்டே இருக்குமாம். அப்படியும் வரவில்லை என்றால் அந்த ஏக்கத்திலேயே உயிரை விட்டுவிடுமாம். அதனால் தான் இந்த பறவையை கணவன் மனைவி உறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்கின்றனர். வாஸ்து ரீதியாக இந்த பொம்மையை வாங்கி உங்களது படுக்கை அறையில் வைத்து விட்டால் கணவன்-மனைவிக்கிடையே எந்த பிரச்சினையும் வராது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அதன் ஒற்றுமையை நினைத்துப் பார்ப்பார்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும் என்பது நம்பிக்கை.

mandarin

மாண்டரின் பறவையை பொம்மையாகவும், ஓவியமாகவும் வாங்கிக் கொள்ளலாம். ஓவியங்களை படுக்கை அறையில் மாட்டி வைக்கலாம். பொம்மையாக இருக்கும் பட்சத்தில் அது மரத்தாலான பொம்மையாக கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். தனித்தனியாகவும் மாண்டரின் பறவை கிடைக்கிறது. ஆனால் நீங்கள் கணவன் மனைவி பிரச்சனைக்காக வைப்பதானால் இரண்டு பறவைகளும் ஒன்றையொன்று நோக்கிக் கொண்டிருப்பது போல் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

mandarin-duck

இது கணவன் மனைவி பிரச்சனைக்கு மட்டுமல்ல. காதலில் பிரச்சனைகள் இருப்பவர்களும், மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருப்பவர்களும், தன் இணை தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் இதை வாங்கி வைத்துக் கொள்ளலாம். புரிந்து கொள்ளாத கணவனோ மனைவியோ கட்டாயம் இதை வைப்பதால் மனம் மாறுவார்கள். விரைவில் உங்களை புரிந்து கொண்டு நிம்மதியான ஒரு வாழ்க்கையை உங்களுக்கு அளிப்பார்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வாழ்க்கையின் ரகசியத்தை 12 கட்டங்கள் எப்படி சொல்கிறது தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mandarin duck as per vastu. Mandarin duck pair. Mandarin duck in tamil. Mandarin duck vastu. Mandarin duck facts.