ஹெல்தியான இந்த கீரை பக்கோடாவை இப்படி டேஸ்ட்டா செஞ்சு கொடுங்க சுடச்சுட தீர்ந்து போகும் எவ்வளவு செஞ்சாலும் பத்தவே பத்தாது.

keera pakoda
- Advertisement -

குழந்தைகள் வீட்டிலிருந்தாலும் சரி பள்ளிக்கு சென்றாலும் மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி அடம் பிடித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நேரங்களில் கடைகளில் விற்கும் ஆரோக்கியம் மற்ற ஸ்நாக்ஸ்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலே ஆரோக்கியமான முறையில் ஹெல்தியான இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.

அந்த வகையில் இந்தப் சமையல் குறிப்பு பதிவில் நாம் கீரையை வைத்து பக்கோடா எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம் இது வரைக்கும் இந்த பக்கோடாவை கோஷ் வெங்காயம் வைத்து செய்து இருப்போம். அதில் கொஞ்சம் வித்தியாசமாக கீரையை சேர்த்து சுவையாகவும் ஆரோக்கியமாகவும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் வாங்க இப்போது கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

செய்முறை

இதற்கு உங்களுக்கு விருப்பமான எந்த கீரையாக இருந்தாலும் அதை சுத்தப்படுத்தி இரண்டு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பால கீரையில் செய்தால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் . இந்த கீரை எல்லாம் நீங்கள் சுத்தம் செய்து தயாராக வைத்திருந்தால் இந்த பக்கோடா செய்யும் பத்து நிமிடம் கூட ஆகாது.

அடுத்து ஒரு பவுலில் ஒரு கப் கடலை மாவு 2 ஸ்பூன் அரிசி மாவு அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், இரண்டு பெரிய வெங்காயம் நீள வாக்கில் நறுக்கி இதையெல்லாம் சேர்த்து பிறகு ஏற்கனவே சுத்தம் செய்து வைத்த கீரையும் சேர்த்து இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து இந்த பக்கோடா பொரிப்பதற்கான எண்ணெய் ஊற்றுங்கள் எண்ணெய் சூடான பிறகு அதிலிருந்து ஒரு கரண்டி எண்ணெய் மட்டும் எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் ஊற்றி ஸ்பூன் வைத்து கலந்து கொள்ளுங்கள்.

எண்ணெய் ஊற்றியதால் மாவு சூடாக இருக்கும். முதலில் ஸ்பூன் வைத்து கலந்து சூடு ஆறிய பிறகு லேசாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சூப்பரான மொறு மொறு வெண்டைக்காய் பக்கோடா இப்படி செய்ஞ்சு பாருங்களேன். சுடசுட செய்தவுடன் தட்டு காலியா ஆகிவிடும். அவ்வளவு மொறுமொறுப்பு அவ்வளவு ருசி.

சுட சுட பக்கோடா சூப்பரா தயாராகி விட்டது. பெரும்பாலும் குழந்தைகள் கீரையை சாப்பிட மாட்டார்கள் இது போல ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கும் பொழுது ஆரோக்கியமான முறையில் ஸ்நாக்ஸ் கொடுத்தது போலவும் இருக்கும். கீரையை குழந்தைகள் சாப்பிடுவது போலவும் இருக்கும். மிஸ் பண்ணாம இந்த ரெசியை உங்க குழந்தைகளுக்கு செய்து கொடுங்க.

- Advertisement -