கேரளா ஸ்டைல் அவியல், சூப்பரா எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?

aviyal3
- Advertisement -

சில வீட்டு கல்யாணங்களில் பந்தியில், அடை தோசைக்கு அவியல் வைக்கிறார்கள். சில பேரது கல்யாண பந்தியில், சாதத்திற்கும் அவியல் வைப்பார்கள். கேரளா ஸ்டைல் அவியலை, வெளியிடங்களில் சாப்பிடும் போது, அதை நம் வீட்டிலும் செய்ய வேண்டும் என்று சில பேருக்கு ஆசை இருக்கும். கேரளா சுவையில், அந்த கேரளத்து மனம் மாறாமல், அவியலை சுலபமான முறையில், சுவையான முறையில் எப்படி செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுவை மட்டும் இல்லைங்க! இதுல ஆரோக்கியமும் அதிகம் உண்டு.

vegetables

அவியலுக்கு தேவையான காய்கறிகள்:
Step 1:
வாழைக்காய் – 1, கேரட் -1, சேனைக்கிழங்கு – சிறிய துண்டு, கொத்தவரங்காய் – 6, வெள்ளைப் பூசணி – சிறிய துண்டு, அவரை – 6, கோவைக்காய் – 10, முருங்கைக்காய் – 1 அல்லது 2, பீன்ஸ் – 6, கத்தரிக்காய் -2 , இவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது அல்லாமல் உங்களுக்கு வேறு எந்த காய்கள் பிடிக்குமோ, அதையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், கட்டாயமாக, கோவக்காய், வாழைக்காய், முருங்கைக்காய்,  இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த காய்கறிகளில் எல்லாவற்றிலும் உங்களுக்கு தேவையான அளவு காய்கறிகளை எடுத்துக்கொண்டு, அந்த காய்கறிகளை சுத்தமாக கழுவி விட்டு, மிகவும் பொடியாக அல்லாமல், மிகவும் பெரியதாகவும் அல்லாமல் சரியான அளவில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நீள நீள வாக்கில் அவியலுக்கு காய்கறிகள் சேர்க்கப்பட வேண்டும்.

aviyal

Step 2:
ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த காய்கறிகளை எல்லாம் சேர்த்து, கொஞ்சமாக உப்பு போட்டு, 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள்தூள் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, அடுப்பில் வைத்து ஒரு மூடி போட்டு, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். காய்கறிகள் எல்லாம் குழைந்து விடக்கூடாது. காய்கறிகள் குழைந்து விட்டால், அவியல் ருசி குறைந்து விடும். காய்கறிகள் பக்குவமாக வேகட்டும்.

- Advertisement -

Step 3:
காய்கறிகள் வேவதற்குள், அரைமூடி அளவு தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். காரத்திற்கு தேவையான அளவு நான்கிலிருந்து ஐந்து பச்சை மிளகாய், 1 ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு இவைகளை ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில், திக்கான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். தேங்காயை குரு மாவுக்கு அரைப்பதுபோல மைய அரைக்காமல், கொஞ்சம் திப்பிதிப்பியாக இருப்பது போல் அரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சில பேர் இந்த அவியலில் பூண்டு சேர்க்க மாட்டார்கள். இருப்பினும் பூண்டு சேர்த்தால் சுவை மேலும் அதிகரிக்கும்.

aviyal1

Step 4:
காய்கறிகள் பதமாக வெந்து வந்ததும், அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை மிதமான தீயில் அவியலை கொதிக்க விடவேண்டும். இந்த இடத்தில் தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

aviyal2

அவியலை இறக்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பாக, இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும். ரொம்பவும் புளித்த தயிரை ஊற்றக் கூடாது. இப்போது உங்கள் கடாயில் அவியல் தயாராக இருக்கும் கமகம வாசத்தோடு. இறுதியாக கேரளா ஸ்டைலில் 2 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு கருவேப்பிலை, வர மிளகாய் தாளித்து கொட்டி அவியலை இருக்கிறீர்கள் என்றால் சூப்பரான அவியல் தயார்.

- Advertisement -