உங்கள் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்க இக்கோயிலுக்கு செல்லுங்கள்

Pillayarpatti Vinayagar

மனிதர்கள் அனைவருடைய வாழ்வும் ஒரே மாதிரியானது அல்ல. சிலரின் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைகளும் இன்றி மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஆனால் பலருக்கும் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் ஏற்ற, இறக்கமான நிலையே இருக்கிறது இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கும் கோயில் தான் “கேரளபுரம் அருள்மிகு விநாயகர் கோயில்”. அக்கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Vinayagar

கேரளபுரம் விநாயகர் கோயில் வரலாறு

சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இந்த கேரளபுரம் விநாயகர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனாக விநாயகர் பெருமான் இருக்கிறார். கோயில் வரலாறு படி திருவிதாங்கூர் அரச குளத்தை சார்ந்த வீரகேரளவர்மா என்கிற மன்னர் ராமநாதபுர மன்னரை காண்பதற்கு ராமேஸ்வரம் சென்றார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கேரளவர்மா நீராடி முடித்ததும், தனது காலில் இடறிய ஒரு கல்லை எடுத்து பார்த்தார். அக்கல் விநாயகர் வடிவில் இருத்தது.

ராமநாத மன்னரை சந்தித்த போது கேரளவர்மா மன்னர் அக்கல்லை சேதுபதி மன்னரிடம் காட்டினார். அவரும் அக்கல்லை கண்டு கண்டு ஆச்சர்யப்பட்டு, அதை தன்னுடைய பரிசாக வைத்துக்கொள்ளுமாறும், அது பார்ப்பதற்கு விநாயகர் உருவம் கொண்டிருப்பதால் அதற்கு ஒரு கோயில் கட்டி வழிபடுங்கள் என அறிவுறுத்தினார். அதை ஏற்ற கேரளவர்மா மன்னரும் அப்போதைய கேரள பகுதியாக இருந்த இந்த கேரளபுரம் பகுதியில் அந்த விநாயகர் கல்லை ஸ்தாபித்து ஒரு சிறிய கோயில் அமைத்தார். அதிசயமான அக்கல் அரச மரத்தடியில் ஸ்தாபிக்கபட்ட போது, அரச மரத்துடன் சேர்ந்து அக்கல்லும் மிக பெரிய விநாயகர் உருவம் கொண்ட சிலையாக வளர்ந்து விட்டது.

கேரளபுரம் விநாயகர் கோயில் சிறப்புக்கள்

இந்த கோயிலின் விநாயகர் விக்கரகமான அந்த அதிசய கல் அபூர்வமான இந்திர காந்த கல் வகையை சார்ந்தது என புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கூறியிருக்கின்றனர். மேலும் இந்த விநாயகர் விக்ரகம் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும் காட்சியளிப்பது ஒரு அதிசய நிகழ்வாக கருதி ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

- Advertisement -

vinayagar

ஏற்ற இறக்கமான வாழ்க்கை நிலை கொண்டவர்கள் அவை தீர்த்து வாழ்வில் வளமை பெருக இக்கோயிலுக்கு வந்து வழிபடுவதால் நன்மை உண்டாகும் என்பது பக்தர்களின் கருத்து. வேண்டுதல் நிறைவேறியவர்கள் விநாயகருக்கு தேங்காய் உடைத்தும், அருகம்புல் மாலை சாற்றியும் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு கேரளபுரம் விநாயகர் கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகிலிருக்கும் கேரளபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 வரை கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு கேரளபுரம் விநாயகர் கோயில்
கேரளபுரம்
நாகர்கோயில்
கன்னியாகுமரி மாவட்டம் – 629174

இதையும் படிக்கலாமே:
விளக்கொளி பெருமாள் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Keralapuram vinayagar temple in Tamil. It is also called as Thuckalay vinayagar temple in Tamil or Kanyakumari temples in Tamil or Keralapuram vinayagar kovil in Tamil.