- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகேட்ட வரத்தை தரும் முருகன் வழிபாடு

கேட்ட வரத்தை தரும் முருகன் வழிபாடு

- Advertisement -

முருகப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சில குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி விரதம் இருந்து வழிபட்டால் நாம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டாலும் முருகன் நிச்சயம் தருவார் என ஆன்றோர்களும் பக்தர்களும் உறுதியாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்த விரதத்தை அனைவராலும் தொடர்ந்து கடைபிடிக்க முடியாது என கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய அருளுக்கு தகுதியானவரா என்பதை பரிசோதிக்க முருகப்பெருமான் பல சோதனைகளை தருவார். இந்த சோதனைகளில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே முருகப்பெருமானின் முழு அருளை பெற முடியும்.‌ அப்படிப்பட்ட முருகப் பெருமானின் அருளை பெறுவதற்குரிய விரதத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

முருகப்பெருமானுக்கு மூன்று விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி திதியில் விரதம் இருப்பதை திதி விரதம் எனவும், விசாகம், கிருத்திகை, பூரம் நட்சத்திரங்களில் இருப்பதை நட்சத்திர விரதம் எனவும், செவ்வாய்க்கிழமை தோறும் கடைபிடிக்கப்படும் விரதம் கிழமை விரதம் என்றும் சொல்வார்கள். வளர்பிறை சஷ்டி தேய்பிறை சஷ்டி என மாதத்திற்கு இரண்டு சஷ்டி திதிகள் வரும்.

- Advertisement -

பிரச்சனைகள் மற்றும் நோய்கள் தீர வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறை சஷ்டி திதியில் விரதம் மேற்கொள்ள வேண்டும், வாழ்க்கையில் முன்னேற, திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்கிறவர்கள் வளர்பிறை சஷ்டியில் விரதம் மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர முருகப்பெருமானிடம் கேட்ட வரம் கிடைக்க வேண்டும் என்பவர்கள் இருக்கக்கூடிய விரதம் ஒன்று உள்ளன. அதாவது “என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் பண்ணி விட்டேன். எவ்வளவோ போராடியும் இனி என்ன செய்வதென்று தெரியவில்லை”. நான் நினைக்கிற அல்லது வேண்டுகிற விஷயத்தை எனக்கு நடத்தி கொடு முருகா என முருகப்பெருமானின் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு வைராக்கியமாக இந்த விரதத்தை கடைபிடித்தால் முருக கடவுள் நிச்சயம் நாம் கேட்கும் வரத்தை அருள்வார் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இது 48 நாட்கள் விரதம் ஆகும். ஒன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் இந்த 48 நாள் விரதம் ஆகும். அன்றாடம் காலையில் சுத்தமாக குளித்துவிட்டு தூய்மையான மனதுடன் நெற்றியில் திருநீறை அணிந்து வீட்டு பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து முருகனுக்கு செவ்வரளி மலர்கள் சாற்றி நைவேத்தியமாக ஏதாவது ஒரு பழம் அல்லது ஒரு இனிப்பு செய்து படைத்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்யும்போது முருகனுக்கு உரிய சக்தி வாய்ந்த “சரவண பவ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்தல் அவசியம்.

இவற்றில் ஏதும் இல்லை என்றால் ஒரு டம்ளர் பாலில் சிறிது தேன் கலந்து நைவேத்தியம் வைக்கலாம் அல்லது தேனும் திணை மாவும் படைக்கலாம். அன்றாடம் காலையில் அவசியம் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். உங்களுக்கு எந்தெந்த பிரச்சனை தீர வேண்டுமோ அதற்குரிய திருப்புகழ் பாடலை தினமும் விடாமல் பாராயணம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே 11 வாரத்தில் நல்ல வேலை கிடைக்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு

இவ்வாறு 48 நாள் தவறாமல் முழு மனதுடன் இந்த வழிபாட்டை செய்து வர நிச்சயம் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். நல்லதே நடக்கும் என்று நம்பலாம். எனவே இதனை அனைவரும் பயன்படுத்தி நல்ல பலனை அடைவீர்கள் என்று நம்பி இந்த பதிவினை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்