தேவர்களுக்கு பகல் பொழுதாக கருதக்கூடிய காலம் தொடங்கக்கூடிய மாதமான தை மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இந்த தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அதீத நற்பலன்களை தரக்கூடியதாக திகழ்கிறது. அந்த வகையில் தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பது ஜனவரி மாதம் 17ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் நாம் பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அந்த வழிபாட்டிற்கு அதிக பலன் கிடைக்கும் என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக வாராகி அம்மனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியது. அப்படி வாராகி அம்மனிடம் நாம் கேட்ட வரம் கிடைப்பதற்கு எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கேட்டதை கொடுக்கும் வாராகி வழிபாடு
கலியுகத்தில் பலரும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக வழிபாடு செய்யக்கூடிய ஒரு தெய்வம் தான் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாக இருந்தாலும் பக்தர்கள் உண்மையான பக்தியோடும் அன்போடும் வாராகி அம்மனை வணங்கினால் ஒரு தாயாக இருந்து பக்தர்களை காப்பாற்றி அவர்கள் வேண்டிய வரத்தை அருளக்கூடிய தெய்வமாகவும் திகழ்கிறாள். அப்படிப்பட்ட வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கு பஞ்சமி திதி உகந்தது போலவே வெள்ளிக்கிழமையும் உகந்த கிழமையாகவே திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தை வெள்ளிக்கிழமை அன்று நாம் வழிபாடு செய்தோம் என்றால் நாம் கேட்ட வரம் நமக்கு கிடைக்கும்.
இந்த வழிபாட்டை தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து இரவுக்குள் எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படக்கூடியது ஒரே ஒரு பூ. அந்த பூ தான் கருங்குவளை என்று அழைக்க கூடிய சங்குப்பூ. இந்த பூவை கையில் வைத்துக்கொண்டு தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
முதலில் வாராகி அம்மனின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாராகி அம்மனுக்கு பானகத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்படி வைத்து விட்டு சங்கு பூவை நம்முடைய கையில் வைத்துக்கொண்டு இந்த ஒரு மந்திரத்தை 48 முறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு சங்கு பூவை வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ அந்த வரத்தை கேட்க வேண்டும்.
இப்படி நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மன் மனம் மகிழ்ந்து நாம் வேண்டிய வரத்தை நமக்கு அருள்வார் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது வாராகி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான மலராக இந்த சங்குப்பூ திகழ்கிறது தான். சங்கு பூவிற்கு மற்றொரு பெயரும் இருக்கிறது. அதுதான் அபராஜிதா. வாராகி அம்மனின் திருநாமங்களில் ஒன்றாகவும் இந்த அபராஜிதா என்னும் நாமும் வருகிறது என்பதால் வாராகி அம்மனுக்கு இந்த மலரை வைத்து வாராகி அம்மனின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மன் மனம் மகிழ்ந்து நாம் வேண்டியதை நமக்கு அருள்வாய்.
மந்திரம்
“ஓம் அபராஜிதாயை நமஹ”
இதையும் படிக்கலாமே:தை வெள்ளி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
முழுமனதோடு வாராகி அம்மனை நம்பி இந்த ஒரு மலரை கையில் வைத்துக்கொண்டு வழிபாடு செய்து வரங்களை கேட்க வாராகி அம்மன் மனம் மகிழ்ந்து வரங்கள் அனைத்தையும் அருள்வாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.