கெட்ட கனவு கண்டால் கூற வேண்டிய பரிகார மந்திரம்

Ketta-kanavu

மனிதனின் வாழ்க்கை பாதி நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த தூக்கத்தில் எந்த வித தொந்தவரும் இல்லாமல் இருந்தால் அடுத்த நாள் நாம் நம்முடைய பணிகளை சுறுசுறுப்போடும் நிம்மதியோடு செய்ய முடியும். ஆனால் சில நேரங்களில் நமது தூக்கத்தில் சில கெட்ட கனவுகள் வந்து நமது தூக்கத்தை தொந்தரவு செய்யும். கெட்ட கனவுகளை நாம் இரவில் எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொருத்தும் அது எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதை பொருத்தும் அது பலிக்குமா பலிக்காதா என்பதை நம்மால் அறிய முடியும். பொதுவாக கெட்ட கனவு கண்டால் பலருக்கும் உள்ளுக்குள் ஒரு பதற்றம் இருக்கும். ஆனால் கவலை தேவை இல்லை. கெட்ட கனவு பலிக்காமல் இருக்க உதவும் ஒரு பரிகார மந்திரம் உள்ளது. இதோ அந்த மந்திரம்.

Perumal

கெட்ட கனவு பரிகார மந்திரம்:
ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ

இரவில் கெட்ட கனவு கண்டால், அடுத்த நாள் காலையில் எழுந்த உடன் குளித்துவிட்டு பூஜை அரை முன்பு நின்று காக்கும் கடவுளான விஷ்ணுவை மனதில் நிலைநிறுத்தி மேலே உள்ள மந்திரத்தை 5 முறை கூறினால் போதும். நாம் கனவில் கண்ட கெட்ட சம்பவங்கள் ஏதும் நடக்காது. அதோடு நமது மனமும் தெளிவடையும். முடிந்தால் அன்று பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு ஒரு அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பு சேர்க்கும்.

கனவு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இதையும் படிக்கலாமே:
ஆயுள் பலத்தை அதிகரிக்க உதவும் அரசமர மந்திரம்

English Overview:
If some one had bad dreams then here we have given parikara mantra for that. This mantra is called as ketta kanavu parikara manthiram in tamil. The above mantra needs to be chanted 5 times on very next day of bad dreams.