ஆயுள் பலத்தை அதிகரிக்க உதவும் அரசமர மந்திரம்

Arasamaram

அரசமரம் வழிபாடு என்பது தமிழகத்தில் காலம் காலமாக நடக்கக்கூடிய ஒரு வழிபாட்டு முறை ஆகும். அரசமரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் குடிகொண்டுள்ளதாக சாஸ்திரம் கூறுகிறது. அப்படிப்பட்ட அரசமரத்தை ஒவ்வொரு நாள் வழிபாடுகளில் ஒவ்வொரு விதமான பலன்களை பெறலாம். அதே போல அரசமரத்தை எத்தனை முறை சுற்றுகிறோமோ அதற்கேற்ப நமக்கு பலன்கள் உண்டு. அரசமரத்தை சுற்றுகையில் கீழே உள்ள அரசமர வழிபாட்டு மந்திரம் அதை ஜபித்தால் நமது ஆயுள் பலம் அதிகரிக்கும்.

tree

அரசமரம் வழிபாடு மந்திரம் :
மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே
அக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம:
ஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச
ப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே.

ஆயுள் பலம் கூட தினம் அரசமரத்தை 15 முறை வளம் வருவது நல்லது. அதே போல பெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாக தினம் அரசமரத்தை 11 முறை வளம் வருவது நல்லது. ஒருவர் 1008 முறை அரசமரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம். அந்த அளவிற்கு சிறப்பு மிக்கது அரசமர வழிபாடு.

அரசமரத்தை எந்த கிழமையில் வழிபட்டால் என்ன பலன்:

ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரத்தை வழிபடுவோர் முதலில் சூரிய பகவானை வழிபட்டுவிட்டு அதன் பிறகு அரசமரத்தை வழிபட வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் அனைத்தும் விலகும்.

- Advertisement -

திங்கட்கிழமை :
திங்கட்கிழமையிகளில் அரசமரத்தை சுற்றி வந்து வழிபடுவோர் சிவபெருமானை மனதில் நிறுத்தி அவர் நர்மதை ஜபித்தவாறே வழிபடலாம். இதன் மூலம் சௌபாக்கியங்கள் உண்டாகும்.

செவ்வாய்க்கிழமை :
நல்ல காரியங்களை துவங்கும் முன்பு அம்பிகையை நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் அரசமரத்தை வழிபாட்டால் தொட்டது துலங்கும். முயற்சிக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கைகூடும்.

Rajakali Amman

புதன்கிழமை :
புதன் கிழமைகளில் அரசமரத்தை வழிபாடுகளில் முப்பது மூக்கோடு தேவாரங்களை வணங்கி அவர்களின் அருள் பெற வேண்டலாம். இதன் மூலம் நமது நிலை உயரும்.

வியாழக்கிழமை :
வியாழக்கிழமைகளில் அரசமர வழிபாடு செய்கையில் தட்சிணாமூர்த்தியையும் சேர்த்து வழிபடலாம். இதனால் கலையிலும் கல்வியிலும் நாம் மேம்படலாம்.

வெள்ளிக்கிழமை :
வெள்ளிக்கிழமைகளில் அரசமர வழிபாடு செய்கையில் லட்சுமிதேவியையும் சேர்த்து வழிபடலாம். இதனால் தொழில் நஷ்டங்கள், கடன் சுமைகள் நீங்கி வாழ்வில் செல்வம் பெருகும்.

lakshmiசனிக்கிழமை :
சனிக்கிழமைகளில் அரசமரத்தை வழிபடுகையில் விஷ்ணு பகவானை மனதில் நினைத்து வழிபடலாம். இதனால் அன்று நாம் செய்யும் அனைத்தும் நமக்கு நன்மையாகவே முடியும்.

இதையும் படிக்கலாமே:
வேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம்

English Overview:
Here we described about arasamaram vazhipadu in Tamil. When we worship Bodhi Satva tree we will get grace of three God. When we come around that tree our life span will get increase. Apart from that based on the number of rounds we will get different benefits.