அடுத்த வருடமே சொந்த வீடு வாங்க உங்களுக்கும் ஆசையா? புதிய செங்கல் வாங்கி இப்படி வழிபாடு செய்தால் போதுமே!

sevvai-sengal

சொந்த வீடு என்பது எல்லோருக்கும் கனவாகவே இருக்கிறது. வாழ்நாளில் எப்படியாவது தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்கிற லட்சியத்துடன் பயணிக்கும் எவ்வளவோ பேர் உங்களில் இருக்கலாம். சொந்த வீடு யோகம் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அதற்கான அம்சத்தை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். ஒருசிலருக்கு இறுதி வரை வாடகை வீட்டில் வாழ்வதே தலை எழுத்தாக எழுதப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட தலையெழுத்தை கூட சுலபமாக மாற்றும் சக்தி இவருக்கு உண்டு. அவரை எப்படி வழிபடுவது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sevvai

வாடகை வீட்டில் வாடகை கட்டியே சலித்துப் போன வாடகைதாரர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், பூர்வீக சொத்துக்கள் இல்லாமல் சுய முயற்சியில் வீடு கட்டுவது என்பது கனவாகவே போய்விடுகிறது. ஏற்கனவே நிலம் இருக்கிறது, பூர்வீக சொத்து இருக்கிறது, என்றால் எப்படியாவது ஏதாவது ஒரு நல்ல நேரம் வரும் பொழுது அவர்களால் சொந்த வீடு என்கிற கனவை நனவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் எதுவுமே இல்லாமல் சுய உழைப்பில் வாடகையும் கொடுத்துவிட்டு, சொந்தவீடு கனவையும் நிறைவேற்றுவது என்பது கானல் நீர்தான். அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் செவ்வாய் பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாயின் அனுக்கிரகம் இருந்தால் தான் அவர்களால் சொந்த வீட்டில் வாழ முடியும்.

இத்தனை வருட காலம் வாடகை கொடுத்து நொந்து போன நீங்கள் செவ்வாய் பகவானை வணங்கி பாருங்கள். முடியாது என்று நினைத்த காரியம் கூட எளிதாக முடிந்து விடும் யோகம் உண்டாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும், நவகிரக சந்நிதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வாருங்கள். சொந்த வீடு கனவு உங்களுக்கும் நனவாக கூடிய சாத்தியக்கூறு உண்டு.

construct-home

வரப்போகும் புத்தம் புதிய ஆண்டிலாவது எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற கனவில் இருப்பவர்கள் இந்த வழிபாடு செய்யலாம். செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஓரையில் கடைக்கு சென்று அல்லது காசு கொடுத்து ஒரே ஒரு செங்கல்லை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செங்கலை மூலவர் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொடுக்கும் எவ்வளவோ கோவில்கள் இருக்கின்றன. அது போல் கோவில்களுக்கு சென்று பூசாரியிடம் செங்கல்லை கொடுத்து பூஜை செய்து வாங்கி வரலாம்.

- Advertisement -

அல்லது உங்கள் வீட்டிலேயே வடகிழக்கு மூலையில் அந்த செங்கலை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். விஷ்ணு கோத்திரம் உள்ளவர்கள் நாமத்தையும், சிவ கோத்திரம் உள்ளவர்கள் பட்டையையும் செங்கலுக்கு இட்டுக் கொள்ளுங்கள். செவ்வாய் பகவானுக்கு உகந்த நிறமான சிவப்பு வண்ண வஸ்திரத்தை புதிதாக வாங்கி அந்த செங்கலுக்கு சாற்றிக் கொள்ளுங்கள். இதனைச் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஓரையில் தான் செய்ய வேண்டும். மல்லிகைப்பூ அல்லது செண்பகப்பூ கிடைத்தால் செங்கலுக்கு வையுங்கள். பின்னர் தூப, தீப, ஆரத்தி காண்பித்து கீழ்வரும் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

sengal

செவ்வாய் காயத்ரி மந்திரம்:
‘ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’

thuvaram-paruppu

செவ்வாய் பகவானுக்கு உரிய தானியமாக இருப்பது துவரை. துவரை கொண்டு செய்யப்பட்ட ஏதாவது ஒரு நிவேதனத்தை பிரசாதமாக பூஜையில் வையுங்கள். பூஜை முடிந்ததும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இந்த பிரசாதத்தை படைத்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்படி செய்ய விரைவாகவே தோஷங்கள் நீங்கி உங்களுடைய சொந்த வீடு கனவு நனவாக நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படிக்கலாமே
தப்பித்தவறி கூட, இந்த புது வருட பிறப்பிற்கு சாமிகிட்ட இப்படி மட்டும் வேண்டுதலை வைக்காதீங்க. இதனாலதாங்க கஷ்டம் நம்மை விட்டு போகவே மாட்டேங்குது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.