இந்த தீபத்தை ஏற்றி வைப்பவர்கள் வீட்டில், தீயசக்திகளும் எதிர்மறை ஆற்றலும், செய்வினையும் குடி கொள்ள வாய்ப்பே கிடையாது. அற்புதமான அந்த தீபத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

amman-vilaku

நம்மில் நிறைய பேருக்கு செய்வினை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றலின் மேல் அதீத நம்பிக்கை உண்டு. இதனாலேயோ என்னமோ, தெரியவில்லை. அதிகமாக பிரச்சினைகள் வருகின்றது. இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்கள் எதுவுமே இல்லை என்று நம்புபவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களை எதுவும் செய்யாது. ஒருவேளை இப்படியெல்லாம் இருக்குமோ? நமக்கும் யாராவது எதிர்மறை ஆற்றல்களை ஏவி விட்டிருப்பார்களோ? என்ற சந்தேகத்தோடு வாழ்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு பிரச்சினை நிச்சயம் உண்டு. இந்த வரிசையில் நீங்களும் இருந்தால், உங்களுக்கான, உங்கள் மன பயத்தைப் போக்குவதற்கான ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kettasathi-1

முதலில் தேவையற்ற மன பயத்தை போக்கி, தெளிவான சிந்தனைக்கு உங்களை நீங்கள்தான் கொண்டுவர வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலின் மூலமும் பிரச்சனைகள் வராது. மீறி வந்தால் எதிர்கொள்ளும் தைரியம் உங்களிடத்தில் இருந்தால், எதிர்மறை ஆற்றல் நிச்சயம் தோற்றுப்போகும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மன உறுதியை வைத்துக்கொண்டு இந்த பதிவை படிக்கத் தொடங்குங்கள்.

முதலில் நாம் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தப் போகும் பொருள். கருப்பு உப்பு. நாட்டு மருந்து கடைகளில் போய் கருப்பு உப்பு என்று கேட்டால் அவர்களே கொடுப்பார்கள். கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த உப்பை வாங்கி உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வாருங்கள். இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை பார்க்க வேண்டாம். எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் பரிகாரத்தை தொடங்கலாம். முடிந்தவரை காலை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது.

black-salt

காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, 6 மணியிலிருந்து 8 மணிக்குள் பரிகாரத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களின் திருஉருவப் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, வீட்டில் எப்போதும் போல ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பாக ஒரு தாம்புல தட்டில், ஒரு கைப்பிடி அளவு, நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கருப்பு உப்பைக் கொட்டி பரப்பி கொள்ள வேண்டும். அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு உங்களுக்கு தெரிந்த உக்கிரமான அம்மன் தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரம் என்றால் பெரியதாக எதையும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

durga

மகிஷாசுரமர்த்தினி, அங்காள ஈஸ்வரி, காளி அம்மன், துர்க்கை அம்மன், இப்படியாக அசுரர்களை அழித்த அம்மனின் பெயர்களை நீங்கள் உச்சரித்தால் போதும் ‘ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி’ ஓம் அங்காள ஈஸ்வரி போற்றி’ ‘ஓம் காளி தேவியே போற்றி’ ஓம் துர்க்கை அம்மனை போற்றி இப்படியாக உங்களுக்குத் தெரிந்த உக்கிர தெய்வத்தின் ஏதாவது ஒரு மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்.

kaali-abishegam1

எடுத்துக்காட்டிற்கு ‘துர்க்கை அம்மனே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து கொள்ளலாம். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களுக்கு அரளிப்பூ கிடைத்தால், கல் உப்பின் மேல் ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு அந்த அரளி பூவால் அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பினை தேடித்தரும். அரளிப்பூ கிடைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது வாசனை நிறைந்த பூக்கள், சிவப்பு நிறப் பூக்களையும் பயன்படுத்தி அர்ச்சனை செய்யலாம்.

arali

108 முறை மந்திரத்தை உச்சரித்து விட்டு, உங்களை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றல் உங்களை விட்டும் உங்கள் வீட்டை விட்டும், உங்கள் உடலை விட்டும் விலக வேண்டும் என்று அம்மனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை நிறைவடைந்தது. இதேபோல் 48 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

தாம்பாளத் தட்டில் கொட்டி வைத்திருக்கும் கல் உப்பை மட்டும் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரில் கரைத்து, கால் படாத இடத்தில் மண்ணில் ஊற்றி விட வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை புதிய கருப்பு கல் உப்பை தாம்புல தட்டில் போடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Amman-deepam-1

இப்படியாக நீங்கள் அந்த கருப்பு கல் உப்பை வைத்து வழிபாடு செய்யும் போது, உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் அந்த கல்லுப்பு ஈர்த்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமே கிடையாது. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பார்த்து பலன் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வாழ்க்கை பிரகாசிக்க ‘செப்பு பாத்திரத்தில்’ இப்படி செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.