உங்களுடைய வாழ்க்கை பிரகாசிக்க ‘செப்பு பாத்திரத்தில்’ இப்படி செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

surya-valipadu

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சினைகளும், தடங்கல்களும் இருந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கு இருக்கும் பிரச்சனையானது அடுத்தவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையானது உங்களுக்கு இருப்பதில்லை. அவ்வளவு தானே தவிர, ஆனால் பிரச்சனைக்கு மட்டும் வாரண்டி கொடுக்கும் அளவிற்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் நிச்சயம் இருக்கும். அதனை எதிர் கொண்டு சமாளிக்க மனதில் தைரியம் இருக்க வேண்டும். ஒரு சிலர் எல்லாம் சிறு பிரச்சனைக்குக் கூட உடனே மனம் தளர்ந்து சோர்ந்து போய் விடுவார்கள். அவர்களால் எப்படி அடுத்த கட்ட வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றத்தை சந்திக்க முடியும்? உங்களுடைய வாழ்க்கையும் பிரகாசமாக மாற சூரிய பகவானை வேண்டுங்கள். அவரை எப்படி வணங்குவது? என்ன செய்வது? என்பதைத் தெரிந்து கொள்ள இப்பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

surya-bhagavan1

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது கோடான கோடி பலாபலன்களை கொடுக்க வல்லது என்பது நம் முன்னோர்கள் காலத்திலிருந்து நமக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வரும் விஷயமாகும். ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும், அறிவியல் கூட சூரிய நமஸ்காரத்தை செய்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் உண்டாகும் என்று கூறியுள்ளது மறுக்க முடியாத உண்மை. சூரிய நமஸ்காரம் செய்ய முடியாதவர்கள் சூரியனுக்கு எளிய பரிகாரங்கள் செய்யலாம்.

இப்படி செய்வதன் மூலம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி சூரியனுடைய பிரகாசமான ஒளியை போன்றே உங்களுடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும் என்பது முற்றிலும் உண்மை. சூரிய பகவானுடைய ஆசீர்வாதம் இருந்தாலே நம்முடைய பாதி பிரச்சனை தீர்ந்து விடும். சுய ஜாதகத்தில் சூரியன் அமைந்து இருக்கும் இடமே பிரதானமானது. சூரியன் சரியான இடத்தில் அமர்ந்து இருந்தால் உங்களுடைய வாழ்க்கையும் அவரைப் போலவே ஒளி மிக்கதாக இருக்கும். அவர் உங்களுடைய ஜாதகத்தில் வலுவிழந்து விட்டால் வாழ்க்கையில் தொடர் போராட்டங்களையும் சந்திப்பீர்கள்.

Navathaniyam

அப்படி இருக்கும் பொழுது ஒரு செப்புப் பாத்திரத்தில் தினமும் இரவு தூங்கும் முன் சிறிதளவு தண்ணீரையும், அதில் சில தானியங்களையும் அல்லது நவதானியங்களை கூட சேர்த்துக் கொள்ளலாம். தானிய வகை ஏதாவது ஒன்றை கட்டாயம் அந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பின்னர் மறுநாள் காலையில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பகவானுக்கு அந்த தண்ணீரை தினமும் சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கி புதிய வழி பிறக்கும் என்பது ஐதீகம். எந்த கதவைத் திறந்தாலும் அடைத்துக் கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். வழியே இல்லாத நேரத்தில் புதிய கதவு ஒன்று திறக்காதா? என ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சூரிய பகவானுடைய இந்த வழிபாடு செய்வது உங்களுக்கு பேருதவியாக அமையும்.

surya-namaskar1

சூரியனை மிஞ்சிய சக்தி இந்த பிரபஞ்சத்தில் எதுவும் கிடையாது. சூரியன் இல்லை என்றால் பூமியும் கிடையாது. சூரிய கடவுளை வணங்குபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதும் நிச்சயமாக கிடையவே கிடையாது. கோவில்களுக்கு செல்லும் பொழுது சூரியனுக்குரிய வஸ்திரத்தை நவகிரக சூரியனுக்கு அணிவித்து வந்தால் சுபகாரியத் தடைகள் நீங்கும். சுபச் செய்திகள் வீடு தேடி வரும்.

இதையும் படிக்கலாமே
இவர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் இந்த 1 பொருள் உங்களை கோடீஸ்வரராக கூட மாற்றிவிடும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.