கேது பகவானுக்குரிய நட்சத்திரங்களில் சிறந்த பலன்கள் பெறுவது எது தெரியுமா?

ketu

ஜோதிட சாஸ்திரத்தில் மற்ற கிரகங்களைக் காட்டிலும் ராகு மற்றும் கேது கிரகங்கள் மிகவும் வலிமை வாய்ந்த தாகும். மற்ற கிரகங்களைக் காட்டிலும் பாதகமான பலன்களை அதிகம் தரும் கிரகங்களாக இந்த ராகு கேது கிரகங்கள் இருக்கின்றன. இதில் தாய் வழி முன்னோர்களை பற்றி கூறும் பித்ருகாரகனாகவும், மோட்சகாரகன் எனவும் அழைக்கப்படுபவர் கேது பகவானாவார். சில பண்டைய ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது படி கேது பகவான் சனி பகவானின் அம்சம் கொண்டவர் என கூறப்பட காரணம் சனிபகவான் எப்படி அதிக அளவில் நன்மைகளையும், அதிக அளவில் பாதகங்களையும் தருகிறாரோ அதே போன்ற பலன்களை கேது பகவானும் தருகிறார். அந்த கேது பகவானுக்குரிய நட்சத்திரங்கள் குறித்த சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்

astro wheel 1

27 நட்சத்திரங்களில் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய 3 நட்சத்திரங்களும் கேது பகவானுக்குரிய நட்சத்திரங்களாக இருக்கின்றன. “மகம் ஜெகத்தை ஆளும்” என்றும் “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்” என்கிற பழமொழிகள் மகம், மூலம் நட்சத்திரங்களின் அம்சங்களை பற்றி பொதுவாக கூறப்பட்டதாகும். எனினும் இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அஸ்வினி, மகம், மூலம் மூன்றும் ஒரே நட்சத்திரம். இதன் அதிபதி கேது பகவான் ஆவார். ஆனால் இந்த மூன்று நட்சத்திரங்களின் குணங்கள் வேறு வேறாக இருப்பதை பல ஜோதிடர்கள் தங்களின் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மையாகும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த கேது பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் எந்த விசயத்திலும் தனக்கென ஒரு ஒரு தனி வழிமுறைகள், சட்டதிட்டங்களை உருவாக்கி கொண்டு யாருக்கும் அடங்கிப்போகாமல் கட்டுப்படாமல் தான் நினைத்ததை சரி என செய்து முடிகின்ற தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ketu

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த கேது பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் யார் எப்படிப்பட்ட சட்டதிட்டங்களை உருவாக்கினாலும் அதை கடைபிடிக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்படுவார்கள். எனவே இந்த மூல நட்சத்திர கேது பகவானை பின்பற்றி நடப்பவர்கள் சரியான பாதையில் வழி நடத்தப்படுவார்கள்

- Advertisement -

ketu

மகம் நட்சத்திரத்தில் பிறந்து கேது பகவான் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் அனைத்திலும் சற்று வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். இவர்களை பொறுத்த வரையில் சட்ட திட்டங்கள் என்று எதுவும் இவர்களுக்கு கிடையாது. தான் நினைப்பது மட்டுமே சட்டமாக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் புகழ்ச்சிக்கு அடிமையாகும் குணம் இந்த மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.

Nakshatra

பொதுவாக கேதுவுக்குரிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களில் மகம் கேதுவிற்கு சிறந்த பாதை காட்ட மூல கேது பயன்படும் மேலும் அஸ்வினி கேது மகம் கேதுவின் எண்ணத்தை நிறைவேற்றும் இவை இரண்டும் இன்றி மகம் கேதுவினால் தனித்து செயல்பட முடியாது. மேலும் மூல கேதுவும், அஸ்வினி கேதுவும் மகம் கேதுவை புறக்கணித்தால் மகம் கேது மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.

இதையும் படிக்கலாமே:
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய அதிர்ஷ்ட பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ketu nakshatras palan in Tamil. It is also called as Ketu bhagawan in Tamil or Nakshatra palan in Tamil or Jothida palan in Tamil or Ketu gragam in Tamil.