சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இவற்றை செய்யுங்கள்

simham
- Advertisement -

ஒரு ஆணுக்கு சிறந்த கல்வியும், மிகுதியான செல்வமும் இருந்தாலும் அவற்றை எல்லாம் கட்டி காப்பதற்கான தைரியமான குணம், வீரமிக்க செயல்பாடுகள் போன்றவை இருப்பது சிறப்பு. அது போல் பிறரை நிர்வகிக்கின்ற திறனும், பார்த்தவுடன் பிறர் மரியாதை கொடுக்கின்ற கம்பீரத் தோற்றமும் இருந்தால் அவை கூடுதல் சிறப்பாகும். இவையனைத்தும் ஒரு மனிதரிடத்தில் நிறைந்திருக்க அவரின் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சூரியன் கிரகங்கள் சிறப்பான நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக சிம்ம ராசி மற்றும் லக்னத்தில் பிறந்த பிறந்த பெரும்பாலான ஜாதகர்களுக்கு மேற்கூறிய அம்சங்கள் இருப்பதைக் காண முடியும். அத்தகைய சிறப்புமிக்க சிம்ம ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் இருக்கின்ற 9-ஆம் இடத்து அதிபதியால் வாழ்வில் அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

12 ராசிகளில் ஐந்தாவதாக வருகிற ராசி சிம்மம் ராசி ஆகும். இந்த சிம்மம் ராசியின் அதிபதி உலகிற்கு விடியல் வெளிச்சத்தை தரும் சூரிய பகவானாவார். இந்த சிம்ம ராசி மற்றும் லக்னத்திற்கு 9 ஆவது ராசியாக வருவது மேஷம் ராசியாகும். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். சூரிய பகவானுக்கு, செவ்வாய் நட்புக் கிரகம் என்பதால் சூரியனுக்கு மேஷ ராசி உச்ச வீடு என்பதாலும், ஒன்பதாம் இடமான மேஷ ராசியால் சிம்ம மற்றும் லக்னத்தினருக்கு நன்மையான பலன்களே அதிகம் ஏற்படும். எனினும் அந்த ஒன்பதாம் அதிபதியான செவ்வாய் பகவானின் நல்லருளைப் பெற்று மிகச் சிறந்த பலன்களை பெற கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வருவது நன்மை பயக்கும்.

- Advertisement -

சூரிய பகவான் பூமியில் கோதுமை போன்ற தானியங்களின் வளர்ச்சி, உஷ்ணமான பொருட்கள் மற்றும் செம்பு உலோகம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக இருக்கிறார். எனவே சிம்ம ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட கிரகமான செவ்வாய் பகவானின் அருளைப் பெறுவதற்கு செம்பினால் செய்யப்பட்ட உலோகப் பாத்திரங்களை கோயில்கள் மற்றும் பிராமணர்களுக்கு தானமாக வழங்குவது அவர்களின் தோஷத்தை போக்கி வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களை ஏற்படச் செய்யும்.

kantha sasti kavasam lyrics

மேலும் செவ்வாய் கிரகத்தின் அம்சமான முருகப் பெருமான் கோவில்களில் விளக்கேற்றுவதற்கு எண்ணெய், நெய் போன்றவற்றை தானமாக சிம்ம ராசி மற்றும் லக்னக்காரர்கள் தருவது சிறப்பான பலன்களை அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தச் செய்யும். முருகன் கோவில்களுக்கு சென்று செம்பு பாத்திரங்கள தானமாக வழங்கலாம். உலோகம் மற்றும் மண் கொண்டு செய்யப்பட்ட விளக்குகள், தீபக்கால்களை நன்கொடையாக தருவது நல்லது.

- Advertisement -

thalaiyatti viinayagar

சிதிலமடைந்த கோயில்களை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்கு உதவுவது, கோவில்களில் வெளிச்சம் ஏற்படும் வகையில் மின்விளக்கு அமைக்கும் கைங்கரியங்களை செய்வது சிம்ம ராசி மற்றும் லக்னத்தினருக்கு செவ்வாய் பகவானின் அருளை பெற்றுத்தந்து, அவர்களின் வாழ்வில் மிக அற்புதமான ஏற்றமிகு பலன்களை உண்டாக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
திருமணத்திற்கு தினப்பொருத்தம் முக்கியம் ஏன் தெரியுமா?

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Simha lagnam yogam in Tamil. It is also called as Simha rasi in Tamil or Rasi pariharam in Tamil or Jothida pariharam in Tamil or Simha rasi pariharam in Tamil.

- Advertisement -