ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் இவற்றை செய்தால் அதிர்ஷ்டமான வாழ்வை பெறலாம்

budhan
- Advertisement -

இந்திய புராணம் மற்றும் இதிகாசங்களில் அனைத்து வகையான விலங்குகளும் ஏதேனும் ஒரு தெய்வத்திற்கு வாகனமாக இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வைணவ சம்பிரதாயத்தில் பிரதான தெய்வமான மகாவிஷ்ணு சயனம் கொள்ளும் படுக்கையாக ஆதிசேஷன் நாகம் விளங்குகிறார். அந்த ஆதிசேஷன் அவதரித்த நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரமாகும். சக்தி வாய்ந்த இந்த ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெறுவதற்கு செய்ய வேண்டியவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

budhan

27 நட்சத்திர வரிசையில் ஒன்பதாவது நட்சத்திரமாக ஆயில்யம் நட்சத்திரம் வருகிறது. 12 ராசிகளில் ஆயில்யம் நட்சத்திரம் கடகம் ராசியில் வருகிறது. இந்த ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரகங்களில் புதன் பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் இருக்கிறார். யோகிகளின் கருத்துப்படி ஆயில்ய நட்சத்திரம் குண்டலினி சக்தியை குறிக்கும் ஒரு நட்சத்திரமாக உள்ளது. ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் கீழ்கண்ட பரிகாரங்களை மனமொன்றி செய்து வருவதன் மூலம் தங்களின் வாழ்வில் பல நன்மைகளையும், செல்வ செழிப்பையும் பெறலாம்.

- Advertisement -

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஆயில்ய நட்சத்திர தினத்தன்று திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்பு அங்கிருக்கும் புதன் கிரகத்திற்கு பச்சை நிறம் வஸ்திரம் சாற்றி, தீபங்கள் ஏற்றி புதன் பகவானுக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும். மேலும் வருடத்திற்கு ஒரு முறை மதுரை மாநகரில் கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவதால் புதன் கிரக தோஷங்கள் நீங்கும். யோகங்களும், அதிர்ஷ்டங்களும் அதிகம் உண்டாகும். வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஆதிசேஷன் மீது அனந்தசயனத்தில் இருக்கின்ற பெருமாள் மூலவர் இருக்கும் கோவில்களுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது மிகுந்த யோகங்களை தரும்.

sivan

ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய மரமாக புன்னை மரம் இருக்கிறது. புன்னை மரம் தல விருட்சங்களாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அம்மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபட வேண்டும். புதிய முயற்சிகளையும், பணம் சம்பந்தமான விவகாரங்களையும் புதன் கிழமைகளில் மேற்கொள்வது மிகுந்த அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களால் முடிந்த அளவு பாம்புகளை கொல்வதை தவிர்க்க வேண்டும். சிவன் கோவிலின் சிவலிங்க அபிஷேகத்துக்கு உங்கள் நட்சத்திர தினத்தன்று பசும்பால் வழங்குவது உங்களுக்கு வாழ்வில் நற்பலன்களை அதிகம் ஏற்படுத்தும் பரிகாரமாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பித்ரு தோஷம், குல சாபங்கள் நீங்க பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ayilyam nakshatra dosha pariharam in Tamil. It is also called Ayilyam natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Budhan bhagavan natchathirangal in Tamil or Budhan natchathira pariharangal in Tamil.

- Advertisement -