கேழ்வரகு மாவு அடையை ஒருவாட்டி இப்படி தட்டி பாருங்க! அந்த காலத்துல, நம்ம பாட்டி சுட்ட அடை டேஸ்ட் கட்டாயம் வரும்.

உடலுக்கு அதிகப்படியான சத்து கொடுக்கும் தானியங்களில் கேழ்வரகுக்கு முதலிடம் உண்டு. இந்த கேழ்வரகை வாரத்தில் இரண்டு முறையாவது நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கேழ்வரகில் முருங்கைக்கீரை சேர்த்து, அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் எல்லாம் அடை சுட்டு தருவார்கள். அதே சுவையில் மிருதுவான கேவுரு மாவு அடை எப்படி செய்வது என்பதை பற்றி தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த அடையை, ரொம்ப சாஃப்ட் ஆக செய்வதற்கு, மூன்று டிப்ஸ் உங்களுக்காக இந்த பதிவில்! மிஸ் பண்ணாம ஃபுல்லா படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

ragi-adai2

கேவுரு மாவு அடை செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1 கப், முருங்கைக்கீரை – 1 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 3/4 கப், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய காய்ந்த மிளகாய் – 2, உப்பு தேவையான அளவு, சீரகம் – 1/2 ஸ்பூன்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில், ராகி மாவு, முருங்கைக்கீரை, பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அந்த மாவோடு உங்களது கைகளால் அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும். மாவோடு மற்ற மசாலா பொருட்களும் நன்றாக முதலில் கலக்க வேண்டும்.

ragi-adai

அதன் பின்பாக கொதிக்கின்ற சுடு தண்ணீரை ஊற்றி, இந்த மாவை ஒரு கரண்டியால் கலந்து விடுங்கள். பச்சைத் தண்ணீர் ஊற்றி மாவு பிசைவதை விட, சுடு தண்ணீரை ஊற்றி மாவு பிசைந்தால், அடை ரொம்பவும் மிருதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அடை மாவை மிகவும் தண்ணீராகவும் கிடைத்துவிடக் கூடாது, கெட்டிப் பதத்திலுமா கரைத்து விடக்கூடாது. கையில் எடுத்து அடை தட்டும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

தோசைக்கல்லை சூடு படுத்தி விட்டு, அதில் கொஞ்சம் எண்ணையை தேய்த்துவிட்டு, அனுபவம் உள்ளவர்களாக இருந்தால், தோசைக் கல்லிலேயே அடையை போட்டு தட்டிக் கொள்ளலாம். அனுபவம் இல்லாதவர்கள், ஒரு வாழை இலையில் அல்லது ஒரு பிளாஸ்டிக் கவரில், எண்ணெய் தடவி, அதில் அடையை சமமாக தட்டி கடாயில் போட்டு அதன் மேலே சிறிதளவு எண்ணெயை ஊற்றி, ஒரு மூடி போட்டு வேக வைத்தால் அடை சாஃப்டாக வெந்து வரும்.

ragi-adai

மிதமான தீயில் அடையை ஒரு பக்கம் வேக வைத்து விட்டு, மீண்டும் திருப்பி போட்டு, மற்றொரு பக்கத்தையும் சிவக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அடையை சுடும் போதே, பசி வயிற்றை கில்லும். அந்த அளவிற்கு சுவையும் வாசமும் நன்றாக வரும் உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நாளைக்கு காலையில இந்த டிபன் ட்ரை பண்ணி பார்க்கலாமே. (1 கப் அளவு ராகி மாவு, 1 கப் முருங்கைக்கீரை, சுடுதண்ணீரை ஊற்றி மாவு பிசைய வேண்டும். அடையை மூடி வேக வைத்த வேண்டும். இந்த மூன்று டிப்ஸ் மிஸ் பண்ணாதீங்க!)

இதையும் படிக்கலாமே
இந்த கொண்டைக்கடலையை வைத்து ஒரு சூப்பர் தோசை, உங்களுக்கு சுட தெரியுமா? தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க! உடலுக்கு ஆரோக்கியம் தரும் தோசை இது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.