இந்த கொண்டைக்கடலையை வைத்து ஒரு சூப்பர் தோசை, உங்களுக்கு சுட தெரியுமா? தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க! உடலுக்கு ஆரோக்கியம் தரும் தோசை இது.

- Advertisement -

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இன்னைக்கு ராத்திரி வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை சுட்டு பாருங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொண்டைக்கடலை தோசை எப்படி சுடுவது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிம்பிள் டிஷ்! சூப்பர் டிஷ்! ஹெல்தி டிஷ்! எப்படி செய்யறது? இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Kondai Kadalai

Step 1:
முதலில் 1 – கப் அளவு வெள்ளை கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். 8 மணி நேரம் இந்த கொண்டைகடலை ஊற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த கப்பில் கொண்டைக்கடலையை அளந்து எடுத்து கொள்கிறீர்களோ அதே கப்பில், 1/2 கப் அளவு – அவல், 1/2 கப் அளவு – பச்சரிசியை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அவல், பச்சரிசி 3 மணி நேரம் ஊறினால் போதும்.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தில் மசாலா வாசனை பிடிக்கும் என்பவர்கள் 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், வரமிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து இவைகளை தனியாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். (இந்த மசாலா பொருட்களை சேர்க்காமல் வெறும் ஊற வைத்த கொண்டைக்கடலை, அவல், பச்சரிசி, சீரகம், மட்டும் சேர்த்து கூட இந்த தோசையை சுடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரவர் சுவைக்கு ஏற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம்.)

aval

Step 3:
ஊறிய இந்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்க போகின்றோம். கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான்.

- Advertisement -

இந்த மாவு புளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இருக்காது. தோசைக்கல்லை நன்றாக சூடு படுத்தி விட்டு, சாதாரணமாக தோசை ஊற்றுவது போல, ஊற்றி தோசையை மொறு மொறுவென்று சிவக்க வைத்து, உங்கள் சுவைக்கேற்ப நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பரிமாறினால் சூப்பர் தோசை ரெடி.

kondaikadalai-dosa1

இந்த தோசைக்கு உங்கள் விருப்பம் போல் தேங்காய் சட்னி அல்லது கார சட்னியை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். வித்தியாசமான முறையில் வித்தியாசமான சுவையில் சுலபமான தோசையின் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் இந்த தோசையை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
இப்படி ஒரு வாழைக்காய் வருவலை, உங்கள் வாழ்நாளில் சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க! செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் ஃப்ரை எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -