ராகுல் டிராவிட் என்ற சுவரை உடைத்த இந்திய அணி வீரர். யார் தெரியுமா?

dravid
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை 443 அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பாக புஜாரா 106 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 63 ரன்களை தனது பங்கிற்கு சேர்த்தார்.

koli 1

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த 82 ரன்கள் மூலம் கோலி மேலும் ஒரு மகத்தான சாதனை புரிந்துள்ளார். அது யாதெனில் இந்திய அணி வீரர் ஒருவர் இந்திய மைதானம் அல்லாத வெளிநாட்டு மைதானங்களில் ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் (1138) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்பாக இந்த சாதனையை வைத்திருந்தவர் இந்திய அணியின் சுவர் என்று வருணிக்கப்படும் ராகுல் ட்ராவிட். அவர் 1137 ரன்களை ஒரு ஆண்டில் அடித்து அந்த சாதனையை படைத்தார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான கோலி அதனை தற்போது முறியடித்து தன்வசப்படுத்தியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மைதானங்களில் 6 சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :
அடுத்தடுத்த சதம். ஆஸி வீரர்களை மூக்குடைத்த இந்திய வீரர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -