அடுத்தடுத்த சதம். ஆஸி வீரர்களை மூக்குடைத்த இந்திய வீரர்

pujara

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை 443 ரன்களில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பாக புஜாரா 106 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 63 ரன்களை தனது பங்கிற்கு சேர்த்தார்.

pujara-1

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்த புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரித்தான பாணியில் தனது நிதானமான ஆட்டத்தினை மேற்கொண்டு அவரது 17வது சதத்தினை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த முன்னாள் வீரரான கங்குலியின் சாதனையை கடந்து லக்ஷ்மணனுடன் (17 சதம்) இடத்தினை பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் பாக்ஸிங் டே போட்டியில் ஆஸ்திரேலியா மண்ணில் சதமடித்த 5வது இந்திய வீரர் என்ற சிறப்பினையும் புஜாரா தன்வசப்படுத்தினார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

pujara

தொடர்ந்து இந்திய வீரர்களை சீண்டி வரும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது அபார ஆட்டம் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் புஜாரா. இதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கட் இழப்பின்றி 8 ரன்களை அடித்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறுகிறேன்.! ரோஹித்தை சீண்டும் ஆஸி கேப்டன்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்