சிட்னியில் இருந்து கிளம்பிய கோலி! எங்கு செல்ல போகிறார்? என்ன செய்ய போகிறார்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அபார அணி இந்த இதனை தொடரில் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் சிட்னி நகரில் அடுத்து நடக்க விருக்கும் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி மெல்போர்ன் நகரில் இருந்து கிளம்பி சிட்னி நகரை அடைந்தது.

pant 1

ஏற்கனவே இந்திய அணியை சேர்ந்த துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சிட்னி நகரில் இருந்து கிளம்பி தனது குழந்தையை பார்க்க மும்பை வந்துள்ளார். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தற்போது தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சிட்னி நகரில் இருந்து வெளியே கிளம்பி உள்ளார்.

வரும் 2019 புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டு இவர்கள் இருவரும் கிளம்பியுள்ளனர். இதனை ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார் கோலி. அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு நாங்கள் சிட்னியில் இருந்து கிளம்புகிறோம். புத்தாண்டு மாலைக்காக எனது காதல் மனைவியோடு காத்திருக்கிறேன் என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்த பின்னர் மீணடும் சிட்னி நகருக்கு திரும்பி பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார். இருப்பினும் எங்கே சென்றிருக்கிறார் என்பதை கோலி குறிப்பிடவில்லை.

இதையும் படிக்கலாமே :

முக்கிய வீரர்களை கழற்றி விட்ட ஆஸி அணி – ஒரு நாள் தொடரிலும் இந்திய அணிக்கு வெற்றி பிரகாசமானது

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்