முக்கிய வீரர்களை கழற்றி விட்ட ஆஸி அணி – ஒரு நாள் தொடரிலும் இந்திய அணிக்கு வெற்றி பிரகாசமானது

aus-coach

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி (2-1) என்ற நிலையில் பின்தங்கி உள்ளது. இந்தியாவிற்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஒரு நாள் தொடர் துவங்குகிறது. இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளது.

team

குறிப்பாக, தொடர்ந்து இடைவெளியில்லால் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டார்க்,கம்மின்ஸ் மற்றும் ஹாசல்வுட் போன்றோருக்கு ஆஸ்திரேலிய அணி ஓய்வு தர முடிவு செய்துள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக அணியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் அணிக்கு பின்ச் கேப்டனாக செயல் படுவார் என்றும் மேலும் அணியில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர் .

starc

எனவே முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸி அணியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ள தருவாயில்,இந்திய அணிக்கு ஒரு நாள் தொடரை கைப்பற்றவும் பிரகாசமான வாய்ப்பு உண்டாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே :

அப்பா ஆன இந்திய அணி வீரர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியிலிருந்து விலகல்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்