இந்த 1 பொருளுக்கு இவ்வளவு மகத்துவமா? கிராம்பு பரிகாரத்தின் வியக்க வைக்கும் உண்மைகள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

kirambu-lakshmi

நாம் எவ்வளவோ பரிகாரங்கள் செய்து நம்முடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்போம். பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. அதே அளவுக்கு சக்தி படைத்துள்ள இன்னொரு பொருள் கிராம்பு. இந்த ஒரு பொருளில் செய்யப்படும் பரிகாரங்கள் அண்மை காலங்களில் பெருகி வருகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் பரிகாரங்கள் பெருமளவு கை கொடுக்கின்றன என்று நம்பப்படுகிறது. கிராம்பு மூலிகைப் பொருள் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் ரகசிய பரிகாரங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையான பரிகாரங்களை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறுவதற்கு கிராம்பு பரிகாரத்தை மேற்கொள்கின்றனர். ராகு, கேது சுய ஜாதகத்தில் சாதகமற்ற அமைப்பில் இருந்தால் 40 நாட்களுக்கு சிவனுக்கு கிராம்பு படைத்து வழிபடலாம். சனிக்கிழமைகளில் கிராம்பை யாருக்காவது தானம் கொடுப்பதன் மூலமும் துன்பங்களை போக்கி செல்வ வளத்தை பெருக செய்ய முடியும்.

கொடுத்த பணம் திரும்பி வராமல் இழுபறியில் இருந்தால் மகாலட்சுமியை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் கிராம்புகளை எடுத்துக் கொண்டு கற்பூர ஹாரத்தி காண்பிக்கும் பொழுது சேர்த்து அவற்றை எரித்தால் வரவேண்டிய பணம் வசூலாகி விடும். பின்னர் மகாலட்சுமியின் மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களுடைய பிரச்சினைகள் உடனே தீரும் என்பது ஐதீகம்.

mahalakshmi

வெற்றிக்கான பயணத்தை நோக்கிய சமயத்தில் அந்த விஷயங்கள் வெற்றியுடன் முடிய, நீங்கள் வெளியில் செல்லும் பொழுது இரண்டு கிராம்புகளை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் செல்லக்கூடிய வெற்றிக்கான இடத்தில் வைத்து சில கிராம்புகளை எரித்து இஷ்ட தெய்வத்தை வணங்கினால், ஜெயம் நிச்சயம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

21 செவ்வாய்க்கிழமைகள் அனுமனுக்கு அவருக்கு உகந்த மல்லிகை எண்ணெயால் தீபம் ஏற்றி, அனுமன் சாலிசாவை படித்து பின்னர் இரண்டு கிராம்புகளை அந்த தீபத்தில் எரித்து விட வேண்டும். பின்னர் உங்களுடைய பிரார்த்தனைகளை அனுமனிடம் சொன்னால், நிச்சயம் நல்லது நடக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால் பலன்களும் அதிகம் தான்.

hanuman-sivan

கிராம்பை விளக்கில் எரிப்பதால் அதிலிருந்து வரும் மணமானது தெய்வீக தன்மையை பெறுகிறது. கிராம்பிற்கு இருக்கும் வசிய சக்தி நம்முடைய வேண்டுதல்களை பலிக்கச் செய்கிறது. மருத்துவத்திலும் கிராம்பு அதிகமான நன்மைகளை கொடுக்கக் கூடியது. கிராம்பு பணத்தை ஈர்ப்பதில் முதலிடம் வகிக்கிறது.

kirambu 4-compressed

ஒரு சில கிராம்புகளை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் அந்த இடத்தில் பணம் செழிக்கும் என்பது ஐதீகம். எப்போதும் கிராம்பை உங்கள் மணிப்பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். பணம் தடை இல்லாமல் பர்சில் சேர்ந்து கொண்டே இருக்கும். மேற்கூறிய கிராம்பு பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து பார்த்து நீங்களும் பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த கடவுளை மட்டும் இதற்காக வணங்கினால் அமோக வெற்றி பெறலாம்! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.