இந்த கடவுளை மட்டும் இதற்காக வணங்கினால் அமோக வெற்றி பெறலாம்! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்!

temple-prayer

நம்முடைய இந்து மத சாஸ்திரத்தின் படி ஒன்றுக்கு பல கடவுள்கள் நம்மை காக்க நம்முடன் துணை நிற்கின்றார்கள். ஒரு கடவுள் மட்டும் இருந்தால் போதாதா? என்று பலரும் கேட்க பதில் சொல்ல முடியாமல் தவித்து நின்று இருப்போம். ஒரு கடவுள் கைவிட்டால் மனம் தளர்ந்து விடாமல், அடுத்த கடவுளை நாடி தன்னம்பிக்கையுடன் சென்று விடுகிறோம். அனைத்து கடவுள்களும் நம்மை கைவிடுவதில்லை என்று நம்புகிறோம். இவ்வாறான நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காகவே இத்தனை கடவுள்களும் உருவாக்கப்பட்டிருக்கலாம். அந்த வகையில் ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு விஷயத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வது உண்டு.

praying-god1

என்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார்? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். விக்னங்கள் என்றால் வினைகள் அதாவது துன்பங்கள். துன்பங்கள் தீர்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால் விநாயகரை இடையூறுகள் நீங்கவும், காரிய தடை நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் வணங்கி விட்டு செல்ல ஜெயம் நிச்சயம்.

dhanvantri

நோய் பிணிகள் நீங்க தன்வந்திரி பகவானை வணங்க சொல்ல கேட்டிருப்போம். தீராத நோய்களையும் தீர்த்துவிடும் புண்ணியவான் தட்சிணாமூர்த்தி. இவரை வணங்குபவர்களுக்கு எந்த நோயும் உடனே தீரும். பெரிய பெரிய ஆபரேஷன்களை எதிர் கொள்பவர்களுக்கு தட்சிணாமூர்த்தியை வணங்கி சென்றால் தைரியம் பிறக்கும். ஆயுள் முழுக்க ஆரோக்கியம் பெறுவதற்கு ருத்ர பகவானை வணங்கலாம்.

- Advertisement -

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு முருகப்பெருமானின் சுப்பிரமணிய வடிவத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானையும் வணங்கி விட்டு செல்ல அதிர்ஷ்டமான யோகம் உண்டாகும். உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பகைவர்களை துவம்சம் செய்ய திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனை வேண்டுங்கள். சஷ்டி விரதம் இருந்தால் எதிரிகளை எதிர்த்துப் போராடலாம்.

Chendur_BalasubramaniyaSwamy

நம் மேல் விழும் பொறாமை பார்வைகளை தவிடு பொடியாக்க, திருஷ்டிகள் விலக, பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அகல முத்துமாரி அம்மனை வணங்கலாம். சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வீரமாகாளி போன்றவர்களும் இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பார். மனோதிடம் பெற ராஜராஜேஸ்வரியையும், ஆஞ்சநேயரையும் வழிபடலாம். மேலும் சனிபகவானுடைய பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயரையும், ஐயப்பன் சுவாமியையும் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

hanuman

மாங்கல்யம் நிலைக்க மங்கள கௌரியையும், புத்திர பாக்கியம் பெற சந்தானகிருஷ்ணன் மற்றும் சந்தான லட்சுமியை வழிபடலாம். செல்வம் பெருக செல்வாதிபதி குபேரனையும், மகாலட்சுமியுடன் லக்ஷ்மி நாராயணரையும் வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும். சுப நிகழ்வுகளுக்கு, சுபகாரியங்களுக்கு, திருமண வைபவங்களுக்கு காமாட்சி அம்மனையும், துர்க்கை அம்மனையும் வழிபட தடையின்றி வெற்றி உண்டாகும்.

thirupathi

வியாபாரம், தொழில், உத்தியோகம் சிறக்க திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். அவற்றில் சாதிக்க நினைப்பவர்கள் ஏழுமலையானை வணங்கினால் அமோக வெற்றி உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் கட்டாயம் கஜலக்ஷ்மி தேவியை வணங்குவது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். இவைகளையெல்லாம் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயங்கள். இன்று பலரும் மறந்து போயிருக்கலாம். அவற்றை நினைவு படுத்துவதற்காகவே இப்பதிவு என்பதைக் கூறி பதிவை நிறைவு செய்து விடலாம்.

இதையும் படிக்கலாமே
2 ஏலக்காய்களை, இந்த இலையின் மேல் வைத்து விநாயகரை வழிபட்டால், வேண்டிய வரம் உடனே கிடைக்கும். நீண்டநாள் கஷ்டமும் நொடியில் தீரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.