திருவண்ணாமலை கிரிவலம் 2022 | Thiruvannamalai Girivalam Dates 2022

tiruvannamalai girivalam dates
- Advertisement -

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் ஆகும். இந்த சிவன் கோவிலிலை சுற்றி ஆறு பிரகாரங்கள் கட்டப்பட்டுள்ளது. விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க வராக அவதாரம் எடுத்து விஷ்ணு பூமியை குடைந்து சிவனின் அடியை தேட, பிரம்மன் சிவனின் முடியை நோக்கி‌ அன்னப்பறவையில் பறக்கிறார். ஆனால் இரண்டு பேருமே தங்களுடைய முயற்சியில் தோல்வி அடைகின்றனர். ‌சிவன் அடியையும், முடியையும் காண முடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் தான் திருவண்ணாமலை என்று புராணம் சொல்கிறது. இத்திருத்தலம் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலை அக்னியின் இருப்பிடமாக கருதப்படுகிறது.

இக்கோவிலில் சிறப்பம்சம்மாக கருதப்படுவது பெளர்ணமி கிரிவலம் ஆகும். பெளர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் புண்ணியமும், பாப விமோசனமும் கிடைக்கும் என்று புராணம் கூறுகிறது. லட்சக் கணக்கான பக்தர்கள் பெளர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.

- Advertisement -

திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை கிலோமீட்டர் – Thiruvannamalai girivalam km

கிரி என்றால் மலை என்பது பொருளாகும். வலம் என்றால் சுற்றி வருவது என்பது அர்த்தம். ஒருமுறை கிரிவலம் செய்வதற்கு 14 கி.மீ தூரம் நடக்க வேண்டும். பக்தர்கள் கிரிவலம் வரும் நாட்களில் புனித நீராடி, தூய ஆடை மற்றும் திருநீறு அணிந்து கொண்டு மனதில் எந்த ஒரு சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் பக்தியுடன் கிரிவலம் வர வேண்டும். பக்தர்கள் கிரிவலம் தொடங்குவதற்கு முன்பு விநாயகர் மற்றும் அருணாச்சலேஸ்வரர் ஆகியவர்களை வணங்கி விட்டு கிழக்கு வாயிலில் இருந்து மலையை வலம் வருவது சிறப்பு ஆகும்.

திருவண்ணாமலை கிரிவலம் 2022 – Thiruvannamalai Girivalam Dates 2022

திருவண்ணாமலை கிரிவலம் காலண்டர் 2022 – Girivalam Calendar – 2022
திருவண்ணாமலை கிரிவல தேதி 2022திருவண்ணாமலை கிரிவல நேரம் 2022திருவண்ணாமலை கிரிவல கிழமை 2022
16.02.202210:39 PM (Feb 15) - 11:28 PM (Feb 16)புதன்கிழமை
17.03.20222:10 PM (Mar 17) - 1:48 PM (Mar 18)வியாழக்கிழமை
16.04.20222:33 AM (Apr 16) - 1:16 AM (Apr 17)சனிக்கிழமை
15.05.202212:15 PM (May 15) - 10:20 AM (May 16)ஞாயிற்றுக்கிழமை
14.06.20228:17 PM (Jun 13) -5:53 PM (Jun 14)செவ்வாய்க்கிழமை
13.07.20223:20 AM (Jul 13) -12:47 AM (Jul 14)புதன்கிழமை
11.08.202210:22 AM (Aug 11) - 8:02 AM (Aug 12)வியாழக்கிழமை
10.09.20226:23 PM (Sep 09) - 4:35 PM (Sep 10)சனிக்கிழமை
09.10.20224:09 AM ( Oct 09) - 3:11 AM (Oct 10)ஞாயிற்றுக்கிழமை
08.11.20224:54 PM (Nov 07) - 4:59 PM (Nov 08)செவ்வாய்க்கிழமை
07.12.20228:35 AM (Dec 07) - 9:33 AM Dec 08)புதன்கிழமை

திருவண்ணாமலையில் வருடத்தின் 365 நாட்களும் கிரிவலம் வருவதால் சிவன் மோட்ச நிலையை பக்தர்களுக்கு அருள்வார் என்பது நம்பிக்கை. பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது எறும்புப் புற்றுகளுக்கு அன்னமிட்டாலோ அல்லது இனிப்பு வாங்கி வைத்தாலோ பெரும் புண்ணியம் கிடைக்கும். எத்தனை ஆயிரம் எறும்புகள் உண்கிறாதோ அத்தனை ஆயிரம் உயிர்களுக்கும் உணவிட்ட புண்ணியம் நமக்கு கிடைக்கும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோர்களின் ஆசிரமங்களும் இருக்கின்றன.

- Advertisement -

திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் – Thiruvannamalai girivalam benefits

எந்த நாட்களில் கிரிவலம் வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று இப்பொழுது நாம் காணலாம். திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி மற்றும் சிவலோக பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன் மற்றும் வறுமை நீங்கும். புதன்கிழமை கிரிவலம் வந்தால் ஆய கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை நாம் கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று கிரிவலம் வந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவியும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

திருவண்ணாமலை கிரிவலம் செல்லு பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் 8 லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த அஷ்டலிங்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானிய லிங்கம் என்ற பெயர்களில் அறியப்படுகிறது. இந்த எட்டு லிங்கங்களை பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் தரிசனம் செய்தால் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு ‌கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

- Advertisement -

திருவண்ணாமலை கிரிவலம் வருவதற்கான நேரம் – Girivalam on Pournami

பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவோர் பௌர்ணமி திதி தொடங்கி முடியும் நேரத்திற்குள் கிரிவலம் வருவது சிறந்தது. பக்தர்கள் கிரிவலம் செய்யும் பொழுது யாரிடமும் பேசாமல் சிவநாமத்தை மட்டும் உச்சரித்து கிரிவலம் வந்தால் அனைத்து பலன்களையும் பெறலாம்.

திருவண்ணாமலை கிரிவல லிங்கங்கள் – Tiruvannamalai girivalam lingam list

இந்திரலிங்கம்: கிரிவலம் செல்லும் போது பக்தர்கள் முதலில் தரிசிக்கும் லிங்கம் கிழக்கு திசையை நோக்கிய இந்திரலிங்கம் ஆகும். இந்திரலிங்கத்தை தரிசனம் செய்தால் வாழ்வில் நீண்ட ஆயுளும், குறைவில்லாத செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அக்னிலிங்கம்:
பக்தர்கள் கிரிவலம் செய்யும் பொழுது காணும் லிங்கம் தாமரை தெப்பக்குளத்திற்கு அருகே தென்கிழக்கு திசையை நோக்கிய வீற்றிருக்கும் அக்னிலிங்கம் ஆகும். இந்த அக்னிலிங்கத்தை வழிபடும் பக்தர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்றும் வாழ்க்கையில் வரும் இடையூறுகள் நீக்கும் சக்தி இதன் சிறப்பம்சம் ஆகும்.

யமலிங்கம்:
கிரிவலத்தின் முன்றாவது லிங்கமாக அறியப்படுவது தெற்கு திசையை நோக்கி இருக்கும் ‌யமலிங்கம் ஆகும். இந்த யமலிங்கத்தை வணங்கினால் பண நெருக்கடி ஏற்படாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என்று புராணம் கூறுகிறது.

நிருதிலிங்கம் – Thiruvannamalai girivalam lingam:
பக்தர்கள் கிரிவலம் வரும் வழியில் நான்காவதாக தரிசிக்கும் லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி இருக்கும் நிருதிலிங்கம் ஆகும். இதனை வழிபட்டால் வாழ்வில் பிரச்சினைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

வருணலிங்கம்:
கிரிவலம் வரும் வழியில் மேற்கு ‌திசையை நோக்கிய வாறு இருக்கும் வருணலிங்கம் ஐந்தாவதாக பக்தர்களுக்கு காட்சி தருகிறது. இந்த வருணலிங்கத்தை‌ வணங்கினால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்று புராணம் கூறுகிறது.

வாயுலிங்கம்:
பக்தர்கள் கிரிவலம் வரும் வழியில் தரிசனம் செய்யும் லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியபடி இருக்கும் வாயுலிங்கம், ஆகும். இதய நோய், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

குபேரலிங்கம்:
கிரிவலத்தின் ஏழாவதாக பக்தர்களுக்கு காட்சி தரும் லிங்கம் வடதிசை நோக்கி வீற்றிருக்கும் குபேரலிங்கம் ஆகும். இந்த குபேரலிங்கத்தை வணங்கினால் செல்வச்செழிப்போடு வாழ்வது நிச்சயம்.

ஈசானியலிங்கம்:
கிரிவலத்தின் கடைசி லிங்கம் வடதிசையை நோக்கி இருக்கும் ஈசானியலிங்கம். இதனை வணங்கினால் அமைதியான வாழ்வும், வெற்றியும் பெறுவது நிச்சயம்.

இந்த எட்டு லிங்க உட்பட கிரிவலம் வரும் பாதையில் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள்,16 விநாயகர் கோவில்ண, ஆதி காமாட்சியம்மன் என மொத்தம் 99 கோவில்கள் உள்ளன. இப்படியான பல சிறப்புகள் கொண்ட திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று பலன் பெறலாம்.

- Advertisement -