கிருத்திகை நட்சத்திரகாரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இரவு நேரங்களில் விண்ணில் ஒளிரும் நட்சத்திரங்கள் பார்ப்பதற்கு அழகானவை ஆகும். நமது நாட்டின் ஜோதிட சாஸ்திரங்களில் வானில் மிக முக்கிய நட்சத்திரங்களாக 27 இருக்கிறதென்றும், இந்த 27 நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில் பிறந்த மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு அவர்கள் பிறந்த நட்சத்திரம் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகிறது. அந்த நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வரும் “கிருத்திகை” அல்லது “கார்த்திகை” நட்சத்திரகாரர்கள் வாழ்வில் மேன்மையான பலன்கள் அடைய செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

sooriya-bagwan

27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் மிகுதியான ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட ஒரு வித்தியாச கிரகமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம். இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழர்களின் கடவுளான முருக பெருமானுக்குரிய நட்சத்திரமாகும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. அந்த வகையில் “கிருத்திகை” நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களை விட கடைசி இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் சில சங்கடங்கள் ஏற்படும் நிலை இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களில் பிறந்தவர்களும் தங்களின் வாழ்வில் நற்பலன்கள், அதிர்ஷ்டங்களை பெறுவதற்கும் செவ்வாய் மற்றும் கிருத்திகை நட்சத்திர தினங்களில் முருகன் கோவிலுக்கு சென்று முருக பெருமானை வழிபடுவது நல்லது.

Lord Murugan

கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதையாக “அக்னி பகவான்” இருப்பதால் வருடத்திற்கு ஒரு முறை கிருத்திகை நட்சத்திர தினத்தில் உங்கள் வீட்டில் கணபதி ஹோமம் செய்து, அந்த ஹோமத்தை செய்து வைக்கும் அந்தணர்களுக்கு பாத்திரம், கத்தி ஆகியவற்றை தானமாக அளிக்க வேண்டும். ஞாயிற்று கிழமைகளில் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்கரம் செய்து சூரியனை வழிபட்டு, அருகிலிருக்கும் கோயிலின் அரசமரத்தை சுற்றி வந்து வழிபட வேண்டும். பசுக்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பழம், அகத்தி கீரை ஆகியவற்றை கொடுத்து வருவது நல்லது. உங்களுடன் எப்போதும் ஒரு எக்கு அல்லது இரும்பாலான சிறிய கத்தி ஒன்று வைத்து கொள்வது உங்களை துஷ்ட சக்திகள், தோஷங்கள் போன்றவை பிடிக்காமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
பரணி நட்சத்திரகாரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kiruthigai natchathira pariharam in Tamil. karthigai natchathiram marriage pariharam in Tamil.