- Advertisement -
Homeமந்திரம்கோரிக்கையை நிறைவேற்றும் கிருத்திகை சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

கோரிக்கையை நிறைவேற்றும் கிருத்திகை சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

- Advertisement -

புரட்டாசி மாதமே மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்றாலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதிலும் அதே நாளில் முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரம் விநாயகர் பெருமாளுக்கு உரிய சங்கடஹர சதுர்த்தியும் வருவது என்பது கூடுதல் சிறப்பை தரும். இதோடு மட்டுமா? அன்று தினம் பிரபஞ்ச பேராற்றல் அதிகம் இருக்கக்கூடிய அதிர்ஷ்ட தேவதையின் அருளை பெறக்கூடிய 10 10 என்ற சேர்க்கையும் வருகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நம்முடைய வேண்டுதலை முன்வைத்து நாம் சொல்லக்கூடிய மந்திரத்திற்கு அதிக அளவில் பலன் உண்டாகும் என்றே கூறலாம். அந்த வகையில் விநாயகப் பெருமானையும் முருகக் கடவுளையும் இணைத்து வேண்டுதல் நிறைவேறுவதற்காக கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கிருத்திகை சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

பொதுவாகவே கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாளில் முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்து முருக மந்திரத்தை கூறுவதன் மூலம் முருகனின் அருளை பெற முடியும். அதே போல் தான் சங்கடஹர சதுர்த்தி வரக்கூடிய நாளில் விநாயகர் பெருமானை நினைத்து விரதம் இருந்து விநாயகப் பெருமானுக்குரிய மந்திரத்தை கூறும் பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீரும். இந்த சிறப்பு வாய்ந்த இரண்டு நாட்களும் ஒரு சேர வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி திகழ்கிறது. அன்றைய நாளில் விநாயகர் மற்றும் முருகனின் அருளைப் பெற உதவக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒரே ஒரு மந்திரம் விநாயகர் பெருமானின் அருளையும் முருகப்பெருமானின் அருளையும் ஒருசேர பெற்றுத் தரும் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம். இந்த ஒரு மந்திரத்தை முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரமும் விநாயகப் பெருமானுக்குரிய சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் 15 நிமிடம் மட்டும் கூறினால் போதும். விநாயகர் மற்றும் முருகனின் அருளை பரிபூரணமாக பெற முடியும். இந்த மந்திரத்தை அக்டோபர் மாதம் 10ஆம் தேதி காலை 4 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நாம் கூறலாம். ராகு காலம் எமகண்ட நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த மந்திரத்தை சுத்தமாக குளித்திருக்கும் பொழுது மட்டும்தான் கூற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு இன்றைய நாளில் அசைவத்தை தவிர்ப்பது மிகவும் சிறப்பு. இந்த மந்திரத்தை வீட்டில் இருந்து தான் கூற வேண்டும், ஆலயத்தில் இருந்து தான் கூற வேண்டும் என்று இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். அதே போல் எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் கூறலாம். சுத்தமாக இருக்கும் பட்சத்தில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து கூறலாம்.

- Advertisement -

முதலில் விநாயகப் பெருமானையும் முருகப்பெருமானையும் முழு மனதோடு நினைத்து உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை மனதார கூறி பிறகு இந்த மந்திரத்தை கூற வேண்டும். மந்திரத்தை 15 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் விநாயகர் மற்றும் முருகப்பெருமானை நினைத்து உங்களுடைய வேண்டுதலை மறுபடியும் கூறி இந்த மந்திர வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். ஒரே ஒரு வேண்டுதலை முன்வைத்து தான் இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும்.

மந்திரம்

” ஓம் கஜமுகா குமாராய நமஹ “

இதையும் படிக்கலாமே: தேவைகள் பூர்த்தியடைய செய்ய வேண்டிய மந்திர வழிபாடு

எளிமையான இந்த ஒரு வரி மந்திரம் விநாயகரின் அருளையும் முருகப்பெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற உதவும். முழு மனதோடு இவர்களை நினைத்து இந்த மந்திரத்தை கூறி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்