உங்கள் சமையல் அறையில் எப்போதும் கரப்பான் பூச்சி, சின்ன வண்டு, கொசு, எரும்பு தொல்லை இருக்கவே இருக்காது. இந்த லிக்விட் போட்டு ஒருமுறை சமையலறையை சுத்தம் செய்து பாருங்கள்.

kitchen
- Advertisement -

நம்முடைய சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், கட்டாயமாக எல்லா பிரச்சனைகளும், எல்லா பூச்சிகளும் நம் சமையலறைக்குள் நுழைய தான் செய்யும். முதலில் சமையலறையை எப்போதும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மீதமான சமையல் பொருட்கள், காய்கறிகளை வெட்டிய கழிவுகள் இவைகளை அப்படியே சிங்க் அடியில் குப்பை கூடையில் போட்டு வைக்கக்கூடாது. இந்த வாசத்திற்கு கொசுத்தொல்லை கரப்பான் பூச்சி தொல்லை கட்டாயம் வரும். மூடி போட்ட குப்பை கூடையை சமையலறையில் பயன்படுத்துவது நல்லது. மூடி போட்ட குப்பை  டப்பாவாக இருந்தாலும், அந்த குப்பைக் கூடைக்குள் முதலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு, அதன் மேலே பேப்பர் அல்லது கவர் போட்டு, அதன் உள்ளே சமையலறை கழிவுகளை போட்டு வையுங்கள். குப்பை கூடையில் இருந்து கெட்டவாடை வீசாமல் இருக்கும்.

சரி, இப்போது டிப்ஸ்க்கு வந்து விடுவோம். ஒரு அகலமான பாத்திரத்தில் உங்களுக்கு தேவையான அளவு 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, அதில் 1 கைப்பிடி அளவு புதினாவை நசுக்கி போட்டு, எலுமிச்சை பழச்சாறு 1 டேபிள்ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். புதினாவின் சாறு மொத்தமும் அந்த தண்ணீரில் இறங்கி விடும். அடுத்தபடியாக பவுடர் 1/2 ஸ்பூன், 1 கட்டி கற்பூரத்தை தூள்செய்து அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த தண்ணீர் நன்றாக ஆறட்டும். ஆறியபின்பு வடிகட்டி இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்ப்ரேவை வைத்து உங்கள் சமையலறையை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக கேஸ் சிலிண்டர் பைப் செல்லும் ஓட்டை, சமையல் மேடை அடியில், சிங்க் அடியில், அலமாரிகளில் மூலை முடுக்குகளில் இந்த ஸ்பிரேவை வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் கப்போர்டுகள் அடித்திருந்தால் கூட, அந்த கபோர்டு உள் பக்கமும், மேல் பக்கமும் கூட இந்த ஸ்பிரேவை தெளித்து துடைத்து விடலாம்.

இந்த வாசத்திற்கு குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் வராது. பூச்சிகளுக்கு இந்த எலுமிச்சைப்பழ வாடையும் புதினா வாடையும் பிடிக்கவே பிடிக்காது. பவுடர் வாசத்திற்கு எறும்புகள் வராது. கரப்பான் பூச்சிகள் முட்டையிட்டு வைக்க கூடிய இடத்தை நன்றாக சுத்தம் செய்து விட்டு அந்த இடத்தில் இந்த ஸ்ரைவை முழுமையாக அடித்துவிட வேண்டும். இந்த வாசம் எந்த இடத்தில் இருக்கின்றதோ, இந்த வாசம் இருக்கும் வரை அந்த இடத்தில் பூசப்பொட்டு தொல்லைகள் நிச்சயம் வராது.

- Advertisement -

நாம் சேர்க்க போவது நான்கே பொருட்கள் தான். புதினா, எலுமிச்சை பழச்சாறு, முகத்திற்கு பயன்படுத்தும் ஏதாவது ஒரு பவுடர், சூடம் என்று சொல்லப்படும் சாதாரண கற்பூரம். உங்களுடைய வீட்டில் புதினா இல்லை என்றால், புதினா கிடைக்கவில்லை என்றால், புதினாவுக்கு பதிலாக துளசி இலைகளை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

கெமிக்கல் கலந்த லீக்விடுகளை சமையலறையில் பயன்படுத்துவதற்கு பதிலாக இப்படி இயற்கையான பொருட்களை வைத்து நம் கையால் தயாரித்த லிக்விடை பயன்படுத்துவது நமக்கு பாதுகாப்பான ஒரு விஷயமும் கூட. பெரும்பாலும் நம் வீட்டிற்குள் கரப்பாம்பூச்சி நுழைவதற்கு காரணமாக இருப்பது சிக்கலில் தண்ணீர் போகக்கூடிய ஓட்டைகள் தான். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஓட்டைகளில் கொஞ்சமாக கல்லுப்பைக் தூவிவிட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து வைத்துவிட்டுப் சென்றால் அந்த ஓட்டையின் வழியாக பூச்சிகள் சமையலறைக்குள் நுழையாது. காலை எழுந்து வந்த உடனே அந்த ஓட்டையில் சுட சுட சுடு தண்ணீரை ஊற்றி விட்டு விடுங்கள். சிங்க் அடைக்காமலும் இருக்கும். பூச்சிகள் வராமல் சுத்தமாகவும் இருக்கும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்குமென்றால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -