இந்தப் பொங்கலுக்கு உங்க வீட்ட, இந்த 2 பொருளை வைத்து சுத்தம் செஞ்சு பாருங்க! கஷ்டமே இல்லாம உங்க வீடு பளபளப்பா மாறிடும்.

இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது. இல்லத்தரசிகள் வீட்டை சுத்தம் செய்ய தொடங்கி இருப்பீர்கள். உங்களுடைய வீட்டை, உங்கள் வீட்டு சமையல் அறையை, சுலபமாக எப்படி சுத்தம் செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு அடிப்படையாக வெறும் 2 பொருட்கள் இருந்தாலே போதும். அந்த பொருட்களை வைத்து நம்முடைய வீட்டை சுலபமாக, சுத்தம் செய்துவிட முடியும்.

plant-in-kitchen

Tip No 1:
முதலில் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் டைல்ஸ், மேடை, கபோர்டு இப்படிப்பட்ட மற்ற இடங்களை எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தம் செய்ய 1 கப் தண்ணீர், 1 கப் வினிகர், 1 கப் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், (எண்ணெய் பிசுக்கு போவதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் விம் லிக்விட் அல்லது ப்ரில் இப்படியாக எந்த லிக்விடை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

அதாவது மேல் சொல்லப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த லிக்விடை வைத்து உங்கள் சமையலறையில் சுவரில் உள்ள டைல்ஸ், கபோர்டு எல்லா இடங்களிலும் ஸ்ப்ரே செய்துவிட்டு, ஐந்து நிமிடங்கள் வரை ஊற விட்டு, அதன் பின்பு ஒரு துணியை வைத்து துடைத்தால் போதும். எண்ணெய் பிசுக்கு சுத்தமாக நீங்கி விடும். இதே மெத்தட் யூஸ் பண்ணி உங்க ஸ்டவ்வையும் சுத்தம் செய்து கொள்ளலாம். உடனே காய்ந்த காட்டன் துணியை வைத்து எல்லா இடங்களையும் ஈரப்பதம் இல்லாத அளவிற்கு துடைத்து விடவும். எண்ணெய் பிசுக்கு போக இந்த லிக்விட் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.

vinigar

Tip No 2:
உங்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல் கண்ணாடி அல்லது பால்கனியில் இருக்கும் கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி இப்படியாக எல்லா வகையான கண்ணாடிகளையும் பலபல வென சுத்தம் செய்ய, 2 டம்ளர் அளவு தண்ணீருடன், 1 டம்ளர் அளவு வினிகரை கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். இந்த லிக்விடை கண்ணாடியில் ஸ்ப்ரே செய்து, லேசாக துடைத்து எடுத்தால் கண்ணாடியில் இருக்கும் அழுக்கு நீங்கி பளபளக்க தொடங்கிவிடும்.

- Advertisement -

Tip No 3:
கண்ணாடியைத் துடைக்க பயன்படுத்திய இந்த லிக்விடை சுவர்களில் உள்ள அழுக்கை நீக்கவும் பயன்படுத்தலாம். உங்களுடைய வீட்டில் சிறிய குழந்தைகள் சுவரில் பென்சில், ஸ்கெட்ச் பென்சில், கொண்டு கிறுக்கி வைத்திருந்தாலும், உங்களது கை அடிக்கடி படும் இடங்களில் வட்டவடிவமாக அழுக்குப் படிந்து இருந்தாலும், அந்த இடங்களில் இந்த ஸ்பிரே அடித்து ஒரு நிமிடம் விட்டு விடுங்கள்.

liquid

அதன் பின்பு லேசாக பாத்திரம் தேய்க்கும் நாரை பயன்படுத்தி துடைத்து எடுத்து, மீண்டும் ஈரத் துணியை வைத்துத் துடைத்து எடுத்தால், கரைகள் நீங்கிவிடும். ஸ்டீல் நாரை வைத்து தேய்த்து விடாதீர்கள் சுண்ணாம்பும் சேர்த்து போய்விடும். குறிப்பாக தாழ்ப்பாள் போடும் இடங்களில் அருகில், சுவற்றில் நம்முடைய கை படும் இடங்களில் திட்டுக்கள் நன்றாக தெரியும் அல்லவா? அப்படிப்பட்ட சுவற்றில் உள்ள கரைகளையும் இந்த லிக்விட் நீக்கிவிடும்.

spray

Tip No 4:
அடுத்தபடியாக எல்லார் வீட்டு சமையலறையிலும் சிங்குக்கு அடியில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். இந்த தொல்லை நீங்க, உங்கள் வீட்டு குப்பை தொட்டியை சிங்கிற்க்கு அடியில் வைப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். இந்த கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபட, கெமிக்கல் கலந்த பொருட்களை சமையலறையில் பயன்படுத்த சிலர் பயப்படுவார்கள்.

cleaning2

உங்கள் வீட்டு சமையலறையில், சமையலுக்கு பயன்படுத்தும் லவங்கம், பட்டை, பிரியாணி இலை, இந்த கரம் மசாலாவை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இது உடனடியாக அரைபடாது. முடிந்தவரை தண்ணீரை விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் அதிகமாக தண்ணீரை சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, இந்த கரம் மசாலா சேர்ந்த தண்ணீரை உங்கள் சமையலறையில் எல்லா இடங்களிலும் ஸ்பிரே செய்து வைக்கலாம். இந்தப் ஸ்ப்ரேவை கபோர்டு உள்ளேயும் ஸ்ப்ரே செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது. இந்த வாசத்திற்கு கரப்பான் பூச்சிகள் வராது. தண்ணீர் பட்டு உங்களது கபோர்ட் வீணாகி விடும் என்றால், ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்கள் விட்டு விட்டு சாதாரண துணியை போட்டு துடைத்து விடுங்கள்.

masala4

இதே ஸ்ப்ரேவில் பூச்சி கற்பூரத்தை பொடி செய்து, இந்த தண்ணீரில் கொஞ்ச நேரம் போட்டு ஊற விட்டு, அந்த தண்ணீரை சிங்குக்கு அடியில் மட்டும் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம்.  நாப்தலின் உருண்டைகளை சேர்த்து தண்ணீரை சமையல் பொருட்கள் வைக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால் மற்ற பாத்திரங்களிலும், இந்த நாப்தலின் உருண்டைகளில் வாடை வீசும் என்பதால், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கும் இடத்தில் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்யக் கூடாது.

kitchen-cockroach

கரப்பான் பூச்சிகள் வராமல் இருக்க சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பில், வாசனை நிறைந்த உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு ஏசன்ஸை 4 சொட்டு விட்டு, நன்றாக கலந்துவிட்டு இந்த பவுடரை சிங்குக்கு அடியில் தினம் தோறும் இரவு தூங்க செல்லும் போது தூவி விட்டாலும் கரப்பான் பூச்சியின் தொல்லை இருக்காது. உங்களுக்கு இந்த டிப்ஸ் எல்லாம் பிடிச்சு இருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
பீதாம்பரி போட்டும் பூஜை பொருட்கள் பளபளக்க வில்லையா? அப்படினா நீங்க இந்த தவறை செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.