பீதாம்பரி போட்டும் பூஜை பொருட்கள் பளபளக்க வில்லையா? அப்படினா நீங்க இந்த தவறை செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம்!

pitambari-pooja-items
- Advertisement -

பூஜைக்கு உரிய பித்தளை பொருட்கள் பளபளவென்று மின்னுவதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் பிதாம்பரி. இந்த பீதாம்பரி உபயோகிக்கும் பொழுது நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் அதிலிருக்கும் பயன்பாடுகளை நம்மால் முழுமையாக உபயோகிக்க முடியாமல் போய்விடுகிறது. பீதாம்பரி உபயோகிக்கும் பொழுது செய்யக்கூடாத தவறு என்ன? பீதாம்பரி எப்படி உபயோகித்தால் அதிகம் சிரமப்படாமல் பாத்திரங்களை புதிதாக பளபளக்க வைக்க முடியும்? இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

pitambari

பிதாம்பரி பவுடர் போட்டு செம்பு மற்றும் பித்தளை பொருட்களை மிக மிக எளிதாக பளிச்சிட வைக்க முடியும். ஆனால் அதற்கு சில ட்ரிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து பார்த்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு ரிசல்ட் கிடைப்பதில்லை. அந்த ட்ரிக்ஸ் மட்டும் தெரிந்து கொண்டால் போதும், பித்தளை மற்றும் செம்புப் பாத்திரங்களை தேய்ப்பது என்பது ஒரு வேலையே இல்லை.

- Advertisement -

பெரும்பாலும் பூஜை சாமான்களை தேய்ப்பதற்கு ஒரு மணி நேரமாவது ஆகிவிடுகிறது. இதனால் சோம்பல்பட்டு அதனை அடிக்கடி கழுவாமலும் விட்டு விடுகிறார்கள். பூஜை பொருட்களை பொறுத்தவரை வாரம் ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்து விட வேண்டும். இது தான் மகாலட்சுமி கடாக்ஷம் நீடிக்க உங்களுக்கு வழி வகுத்து தரும். பூஜைப் பொருட்களை சுத்தம் செய்வதற்கு அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.

pooja-items

ஒரு முறை பூஜை பொருட்களை தண்ணீரில் நனைத்து, நீங்கள் அதில் வைத்துள்ள மஞ்சள் குங்குமங்களை நீக்கி விடுங்கள். நீங்கள் பயன்படுத்த இருக்கும் பிதாம்பரி பவுடரில் தண்ணீர் படாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். பீதாம்பரியில் தண்ணீர் பட்டால் பயன்தராது என்பது தான் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பூஜைப் பொருட்களை தண்ணீரில் நனைத்த பின் ஒரு முறை உதறி தண்ணீரை நீக்கி விடுங்கள். ஈர தன்மையுள்ள உங்களுடைய பூஜை பொருட்களை, ஒவ்வொன்றாக எடுத்து பிதாம்பரி பவுடரை வைத்து தேய்த்து விட வேண்டும். பீதாம்பரி பவுடரை தேய்க்கும் பொழுது கையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய கையினால் அழுத்தம் கொடுத்து எல்லா இடங்களிலும் தேய்து விட்டால் போதும். அந்த பவுடருடன் பித்தளை மற்றும் செம்புப் பாத்திரங்களில் இருக்கும் கருமை தன்மை கலந்து சுத்தமாகிவிடும். தேய்க்கும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் பவுடர் கருப்பாக மாறிவிடுவதை நம்மால் பார்க்க முடியும். அதுபோல் அனைத்து பூஜை பொருட்களையும் செய்து தனியாக வைத்து விட வேண்டும்.

pooja-item-cleaning

இறுதியாக தான் ஒவ்வொரு பொருட்களையும் கழுவி தண்ணீரை உதறி தனியே ஒரு இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றாக கழுவிக் கொண்டு இருக்கக் கூடாது. அனைத்தும் கழுவி முடித்த பின் சுத்தமான துணியைக் கொண்டு கையுடன் துடைத்து வைத்துவிட வேண்டும். சோப்பு பயன்படுத்த நினைப்பவர்கள் தண்ணீர் ஊற்றி கழுவும் பொழுது சோப்பு போட்டு கழுவி கொள்ளலாம். பூஜை பாத்திரங்கள் இன்னும் சூப்பராக இருக்கும். ஈரத்துடன் அப்படியே துடைக்காமல் வைத்து விட்டால் நீங்கள் கழுவி பிரயோஜனம் இருக்காது.

- Advertisement -

pooja-vessels2

பிதாம்பரி உபயோகிக்கும் பொழுது, அந்த பவுடரில் தண்ணீருடன் ஸ்ரப்பர் பயன்படுத்தி தேய்க்கும் பொழுது அது நமக்கு பலன்களையும் கொடுப்பதில்லை. பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு புளி, எலுமிச்சை, கோலமாவு, சபீனா என்று ஏகப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் நேரம் தான் வீணாகும். வெறும் பிதாம்பரி போட்டு தண்ணீர் படாமல் கைகளால் லேசாக அழுத்தி தேய்த்தாலே போதும். புதிதாக வாங்கிய பாத்திரம் போல பளபளன்னு மின்னும். நேரமும் மிச்சமாகும் வாரம் ஒருமுறை சிரமப்படாமல் சுத்தமாக தேய்த்து பக்தியையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரு செடியை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தாலே போதும். துர் தேவதைகளிடமிருந்தும், கண்ணுக்குத் தெரியாத கெடுதலிருந்தும் உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -