உங்கள் வீட்டு சமையலறையில் உங்களுக்கே தெரியாமல் வந்து போகும் பூச்சிகளை விரட்ட இந்த 1 பொருள் போதுமே!

kitchen-cockroach

ஒரு வீட்டில் சமையலறை என்பது மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. அந்த இடத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். யாருடைய வீட்டில் சமையலறை மிகவும் சுத்தமாக இருக்கிறதோ! அவர்களுடைய வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. சமையலறை சுத்தமாக இல்லாவிட்டால் அந்த வீட்டில் வருமானமும் அந்த அளவிற்கு சிறப்பாக இருக்காது. மற்ற அறைகளை காட்டிலும் சமையலறையில் அன்னபூரணி உடன் மகாலட்சுமி தேவியும் வாசம் செய்வதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

kitchen2

அந்த இடத்தில் கரப்பான் பூச்சிகள், எறும்புகள் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நாம் எவ்வளவு தான் பொறுப்பாக அடிக்கடி சுத்தம் செய்து வைத்திருந்தாலும், இந்த கரப்பான் பூச்சி தொல்லைகள் மட்டும் தீர்ந்த பாடாக இருக்காது. எங்கிருந்து தான் வரும் என்று நமக்கே தெரியாது. குட்டி குட்டியாக நிறைய கரப்பான் பூச்சிகள் இரவு நேரங்களில் நமக்கே தெரியாமல் வந்து விட்டு செல்லும். இப்போது இருக்கும் கொசுவர்த்திகளுக்கு கொசுக்கள் சாவதே இல்லை. அதே போல தான் எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லி, எலி என்று எது வீட்டில் வந்தாலும் அவற்றையும் ஒழிப்பது பெரும் சவாலாகவே நமக்கு இருக்கும்.

சமையலறையில் எறும்புகள் வருவது கூட அவ்வளவாக பெரிய விஷயம் இல்லை. எறும்புகள் வரும் இடத்தில் லேசாக பெருங்காயத் தூள் தூவி விட்டால் போதும். அந்த வாசனைக்கு எறும்புகள் வராது. அது போல எலி தொல்லை இருப்பவர்களுக்கு எலி வரும் இடங்களில் சிறிது மிளகாய் பொடியை தூவி வைத்தால் போதும் ஒரு எலி கூட வரவே வராது.

ant-erumbu

பல்லிகள் தொந்தரவு அதிகம் இருந்தால் மின் விளக்குகளுக்கு கீழே அல்லது பல்லிகள் அதிகம் இருக்கும் இடங்களில் மயில் தோகையை ஒட்டி வைத்து விட்டால் போதும். ஒரு பல்லி கூட அந்த இடத்தில் எட்டிக்கூட பார்க்காது. சமையலறையில் பல்லிகள் நடமாடுவது இருக்கவே கூடாது. எனவே சமையல் அறையில் மின் விளக்குக்கு கீழே அல்லது ஜன்னல் இருந்தால் அதற்கு மேலே ஒன்று என்று மயில் தோகையை ஒட்டி வைத்து விடுங்கள். பிறகு சமையலறைக்குள் பல்லி தொல்லை இல்லை.

- Advertisement -

இவைகளை விட சமையலறையில் சுற்றிக் கொண்டிருக்கும் குட்டி குட்டி கரப்பான் பூச்சி தொல்லைகளை ஒழிக்க நீங்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் எலுமிச்சையே போதுமானது. பயன்படுத்திய எலுமிச்சை மூடிகளை தூக்கி எறியாமல் சமையல் அறை செல்ஃப்களில் ஆங்காங்கே வைத்து விடுங்கள். அதன் வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராது. எலுமிச்சை காய்ந்து போகும் வரை அப்படியே விட்டு விடுங்கள். காய்ந்த எலுமிச்சை பழத்தின் வாசனை அந்த அறையில் இருக்கும் வரை குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

elumichai lemon

இது போல் கரப்பான் பூச்சிகள் தொந்தரவு சமையல் அறையில் இருந்தால் அந்த வீட்டில் ஆரோக்கியமும் கெட்டுவிடும். நமக்கே தெரியாமல் நாம் தூங்கிக் கொண்டு இருக்கும் சமயத்தில் மெதுவாக வந்து எல்லா பாத்திரங்களிலும் உட்கார்ந்து விட்டு செல்லும். அதில் இருக்கும் பாக்டீரியாக்கள், உடல் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான் எந்த ஒரு சமையலை செய்வதற்கு முன்னரும் அந்த பாத்திரத்தை ஒரு முறை தண்ணீரில் கழுவி விட்டு செய்வது மிகவும் நல்லது. நேற்று தானே கழுவி வைத்தோம் என்கிற அலட்சியம் வேண்டாம். ஒரு முறை கழுவி விட்டு செய்வதால் நாம் ஒன்றும் குறைந்து விடப் போவது இல்லை. இதனால் ஆரோக்கியம் மேம்படும் என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் சமையலில் இதுவரை அறியாத ரகசியமான 6 விஷயங்கள் உங்களுக்காக இதோ!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.