- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பாத்திரங்களில் ஸ்டிக்கர் ரிமூவிங்

பாத்திரங்களில் ஸ்டிக்கர் ரிமூவிங்

- Advertisement -

பொதுவாக வீட்டிற்கு அல்லது கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களை வாங்கும் பொழுது எவர்சில்வர், பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில்களாக வாங்கி வைக்கிறது வழக்கம். அப்படி வாங்கும் பொழுது அதில் புதிதாக ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்களை நீக்குவதற்காக படாத பாடுபடுவோம். ஸ்க்ரப்பர் பயன்படுத்தினால் கீறல்கள் விழும். எந்த சேதமும் இல்லாமல் எப்படி எளிமையான முறையில் இவற்றில் இருக்கும் ஸ்டிக்கர்களை நீக்குவது? என்னும் வீட்டுக்குறிப்பு ரகசியங்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

முதலாவதாக எவர்சில்வர் பாத்திரங்களை புதிதாக வாங்கும் பொழுது அதில் ஒட்டி இருக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் பெரும்பாலும் கடினமானதாக இருக்கும். நீண்ட நாள் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அவ்வளவு எளிதாக நீங்கள் சேதமில்லாமல் பிரித்து விட முடியாது. இப்படியான பாத்திரங்களில் இருக்கும் ஸ்டிக்கர்களை எளிமையாக நீக்குவதற்கு முதலில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பாத்திரத்தில் படாமல் ஸ்டிக்கரின் மீது மட்டும் நெருப்பை காண்பியுங்கள். அரை வினாடி காண்பித்து விட்டு பின்னர் அரை நிமிடம் பொறுத்திருங்கள். லேசாக சூடு ஆறியதும் ஸ்டிக்கரின் முனை பகுதியை நகத்தால் லேசாக சுரண்டி பிடித்து இழுங்கள், ரொம்ப சுலபமாக அதன் பசை கூட ஒட்டாமல் எளிமையாக பிரிந்து வந்துவிடும்.

அடுத்ததாக கண்ணாடி பாட்டில்களில் இருக்கக்கூடிய ஸ்டிக்கர்களை அகற்றுவது எப்படி? என்று பார்ப்போம். சோப்பு தண்ணீரில் முதலில் பாட்டில்களை ஸ்டிக்கர் இருக்கும் பகுதியை வைத்து ஊற விட வேண்டும். பத்து நிமிடம் ஊறிய பிறகு ஸ்டிக்கர்கள் மட்டும் எளிமையாக வந்து விடும், ஆனால் அதில் இருக்கும் பசை வராது. அப்படி இருந்தால் அந்த இடத்தில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவி அதன் மீது ஆப்ப சோடாவை தூவுங்கள். அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் கொஞ்சம் கூட பசை இல்லாமல் முழுமையாக நீங்கிவிடும்.

- Advertisement -

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கக்கூடிய ஸ்டிக்கர்களை எளிமையாக நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது டப்பாக்கள் எதுவாக இருந்தாலும் கை பொறுக்கும் சூடான தண்ணீரில் போட்டு முதலில் ஊற வையுங்கள். ஸ்டிக்கர் ஊறியதும் மேலே உள்ள பகுதி எளிமையாக உரிந்து வந்துவிடும். அப்படி இல்லை என்றால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஸ்டிக்கரின் மீது தடவி இரண்டு மணி நேரம் கழித்து ஸ்டிக்கரை நீக்கினால் எளிதாக உறிந்து வந்துவிடும். ஆனால் அடி பாகத்தில் ஒட்டி இருக்கும் பசை போன்ற ஒன்றை நீக்குவது தான் இப்போது சவாலாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
செல்வமும் அதிர்ஷ்டமும் தேடி வர

இந்த பசையை பிளாஸ்டிக்கில் இருந்து எளிமையாக நீக்குவதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய நெயில் பாலிஷ் ரிமூவர் நல்ல உதவி செய்யும். சிறிது காட்டனில் நெல் பாலிஷ் ரிமூவரை நனைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தால் போதும், பிளாஸ்டிக்கில் ஒட்டி இருக்கும் பசை எளிமையாக நீங்கி வந்துவிடும். அதன்பிறகு நீங்கள் இவ்வகையான பாட்டில்களை ஒருமுறை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவி விட்டால் சுத்தமாகிவிடும். இதற்காக இரும்பு நார் அல்லது கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் இந்த முறையில் நீங்களும் உங்களுடைய வேண்டாத ஸ்டிக்கர்களை எளிமையாக நீக்கி பயனடையலாம்.

சற்று முன்