ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை நாள் அன்று மகாலட்சுமி தாயாரை பூஜை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை பலரும் தீபாவளியோடு சேர்ந்து வரக்கூடிய ஐப்பசி அமாவாசை நாளில் மட்டும் தான் லட்சுமி பூஜை என்று கடைப்பிடிக்கிறார்கள். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை தினத்திலும் நாம் லஷ்மி பூஜையை செய்தோம் என்றால் நாம் எதிர்பாராத அளவிற்கு செல்வ செழிப்புடன் வாழ முடியும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் பெருமாளை தான் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் ஆடி அமாவாசை தினத்தன்று பெருமாளை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செல்வமும் அதிர்ஷ்டமும் தேடி வர
ஆடி மாதமே சிறப்பு மிகுந்த மாதம். அதிலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆடி அமாவாசை வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதால் இதை குபேர அமாவாசை என்று கூட கூறலாம். பொதுவாகவே ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை நேரத்தில் குபேரரை வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு அளவில்லா செல்வங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதைப்போல் அமாவாசை தினத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலும் செல்வ செழிப்பிற்கு பஞ்சமே இருக்காது. இவை இரண்டும் ஒரு சேர வரக்கூடிய இந்த அற்புதமான நாளை நம் பயன்படுத்தினோம் என்றால் நம்மை விட அதிர்ஷ்டசாலி வேற யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த மந்திரத்தை ஜூலை மாதம் 24 ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரமான காலை 3 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். ராகு காலம், எமகண்ட நேரம் என்று எதுவும் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த மந்திரத்தை கூறுபவர்கள் கண்டிப்பான முறையில் குளித்திருக்க வேண்டும். அசைவம் சாப்பிட்டிருக்க கூடாது. பெண்கள் தீட்டு சமயத்தில் இருக்கும் பட்சத்திலோ அல்லது பிறப்பு இறப்பு தீட்டில் இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். எந்தவித தடையும் கிடையாது. இந்த மந்திரத்தை வீட்டிலோ கோவிலிலோ அமர்ந்துதான் கூற வேண்டும் என்று இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் நாம் கூறலாம்.
இது முழுக்க முழுக்க பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் போற்றக்கூடிய ஒரு மந்திரமாகவே கருதப்படுகிறது. இவர்கள் இருவரையும் முழு மனதோடு நினைத்துக் கொண்டு மகாலட்சுமிக்குரிய ஆற்றல் மிகுந்த அமாவாசை தினத்தில் குபேரருக்குரிய வியாழக்கிழமையில் நாம் கூறும்பொழுது இந்த மந்திரத்திற்கு அதிகப்படியான சக்திகள் கிடைக்கும். அதன் மூலம் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்றே கூறலாம். மேலும் இந்த மந்திரத்தை கூறும்பொழுது எந்தவித எதிர்பார்க்கும் இல்லாமல் கூற வேண்டும்.
இது வேண்டும், அது வேண்டும், அவ்வளவு வேண்டும், இவ்வளவு வேண்டும் என்று எதையுமே எதிர்பார்க்காமல் முழுக்க முழுக்க பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் நினைத்துக் கொண்டு கூறுவது என்பது மிகவும் சிறப்பு. சுத்தமாக இருக்கக்கூடிய பெண்கள் வீட்டில் துளசி செடியை வைத்திருக்கும் பட்சத்தில் அந்த துளசி செடிக்கு அருகில் அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூறினால் அதற்கு பல மடங்கு சக்திகள் உண்டாகும். இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 15 நிமிடமாவது கூற வேண்டும். எண்ணிக்கை கணக்கு கிடையாது. அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் நினைத்துக் கொண்டு கூறினால் போதும்.
மந்திரம்
“லலிதம் ஸ்ரீதரம்
லலிதம் பாஸ்கரம்
லலிதம் சுதர்சனம்”
இதையும் படிக்கலாமே: விபரீத ராஜயோகம் தரும் ஆடி அமாவாசை
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் ஆடி அமாவாசை தினத்தன்று மனதார நினைத்து இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு அவர்களின் அருளால் செல்வமும் அதிர்ஷ்டமும் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.