சமையல் கட்டில் எண்ணெய் பாத்திரங்களை இப்படித்தான் சுத்தம் செய்யணுமா? தெரியாம கூட அப்படி செஞ்சுறாதீங்க!

oil-can-wheat-flour
- Advertisement -

அடுப்படியில் பயன்படுத்தும் எண்ணெய் ஊற்றி வைக்கும் பாத்திரங்கள் எப்போதும் பளபளன்னு இருக்க வேண்டும். பிசுக்குகள் நிறைந்து அழுக்காக இருந்தால் அதிலிருந்து உருவாகக்கூடிய கிருமிகள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் எண்ணெய் ஊற்றி வைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் பெரும்பாலும் நல்ல கனமான பாத்திரங்களாக இருப்பது நல்லது. கணம் நிறைந்துள்ள பாத்திரங்களை சுத்தம் செய்வது என்பது ரொம்பவும் எளிதானது மேலும் எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரங்கள் பயன்படுத்துவது தான் நல்லது. இப்படி பயன்படுத்தும் பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை நீங்கள் எப்படி சுத்தம் செய்வீர்கள்? இது போல செய்யாமல், இப்படி செஞ்சு பாருங்க ரொம்பவும் பளிச்சுன்னு பளபளனும் மின்னும். எண்ணெய் பாத்திரங்களை எளிதாக பராமரிப்பது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்

முதலில் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் பாத்திரங்கள் கனமானதாகவும், எவர்சில்வராகவும் இருப்பது ரொம்பவே நல்லது. எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் அல்லது இதர உலோகங்களை பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு முறை புதிதாக எண்ணெயை ஊற்ற வேண்டும் எனில் இப்படி சுத்தம் செய்த பின்பு பயன்படுத்துங்கள்.

- Advertisement -

முதலில் எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரங்களை தண்ணீரில் கழுவ கூடாது. ஒரு கைப்பிடி அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவு புதிதாக பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என்பதில்லை, வண்டு பிடித்த கோதுமை மாவு, தேவையில்லாத கோதுமை மாவு உங்களிடம் ஏதாவது இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கைப்பிடி நிறைய எடுத்து எண்ணெய் பாத்திரங்களுக்கு உட்புறமும், வெளிப்புறமும் தூவி நன்கு கைகளால் தேயுங்கள்.

இதனால் எண்ணெய் பிசுக்கு தானாகவே முழுவதும் கோதுமை மாவுடன் ஒட்டிக் கொண்டு உருளை உருளையாக உருண்டு திரண்டு வந்துவிடும். பாதி அளவு இதிலேயே உங்களுக்கு எண்ணெய் பிசுக்கு நீங்கிவிடும். அதன் பிறகு சிறிதளவு அரிசி மாவு சேர்த்து, சபீனா பவுடர் இருந்தால் அதை வைத்து கழுவுங்கள். இதனால் பாத்திரங்கள் ரொம்பவும் எளிதாக பளிச்சென மாறும். பிறகு சாதாரண ஸ்கிரப்பர் பயன்படுத்தி சோப், லிக்விட் போன்றவற்றை தொட்டு தேய்த்தால் புதிது போல பளபளன்னு மின்னும். கொஞ்சம் கூட எண்ணெய் பசை கையில் ஒட்டாது.

- Advertisement -

சரி, நீங்கள் எண்ணெய் பாத்திரங்களை அடிக்கடி சுத்தம் செய்ய மாட்டீர்கள் எனில், நாள்பட்ட எண்ணெய் கரையதில் படிந்து அழுக்குகளாக இருக்கிறது என்றால் என்ன செய்யலாம்? இதை நீக்குவதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவுக்கு கோதுமை மாவு, ஒரு கைப்பிடி அளவிற்கு சோள மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கான்பிளவர் மாவு சேர்க்கும் பொழுது எண்ணெய் பிசுக்குகள் வாடை மற்றும் துர்நாற்றம் போன்றவற்றை கூட நீக்கிவிடும். ஆப்ப சோடா எனப்படும் பேக்கிங் சோடா இருந்தால் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

விடாப்பிடியான கறைகள் உள்ள இடங்களில் எல்லாம் நன்கு கைகளாலே தேய்த்துக் கொடுங்கள். இதற்காக ரொம்பவும் சிரமப்பட வேண்டியதில்லை, கைகளால் கொஞ்சம் அழுத்தி தேய்த்தால் போதும், எல்லா பீசுக்குகளும் நீங்கிவிடும். அதன் பிறகு சோப்பு போட்டு கழுவினால் புதிது போல பளபளன்னு மின்ன ஆரம்பித்திடும். எண்ணெய் பாத்திரங்கள் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இல்லாமல் முழுவதுமாக பிளைனாக இருப்பது பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ரொம்பவும் உதவியாக இருக்கும்.

- Advertisement -