எல்லோரது வீட்டிலும் பெரும்பாலும் அவர்களின் சமையலறை சங்குகளில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு தொல்லை தரும். இப்படி சமையல் அறிசிங் கைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதற்கு தேவையில்லாத திட கழிவு பொருட்களை சமையலறை சிங்க்குகளில் போடுவது தான் முக்கிய காரணமாக உள்ளது. சமையலறை சிங்கில் ஏற்படுகின்ற அடைப்புகளை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எவ்வாறு நீக்குவது என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
சமையலறை சிங்கில் இருக்கும் அடைப்புகளை நீக்க நமக்கு தேவையான பொருட்கள்:
ஒரு அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்
இரண்டு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா
கால் கப் வினிகர்
நன்கு கொதிக்க வைக்கப்பட்ட அரை பக்கெட் சுடுதண்ணீர்
ஒரு அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக்கொண்டு, அந்த பாட்டிலின் பாதியளவு வரை தண்ணீரை ஊற்றிக் நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கால் கப் வினிகரை அந்த நீரில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு 2 ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை அந்த பாட்டிலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலில் நீரில் கலந்திருக்கும் வினிகரில் இந்த பேக்கிங் சோடாவை சேர்த்தவுடன் நுரை பொங்கி எழும்பும், அப்போது சட்டென உங்களின் கையை பயன்படுத்தி அந்த பாட்டிலின் வாய் பகுதியை நன்கு அழுத்தமாக மூடிக்கொள்ள வேண்டும்.
இப்படி செய்வதால் சிறிது நேரத்தில் அந்தப் பாட்டிலுக்குள் நுரை பொங்குவது அடங்கி, கேஸ் உண்டாகும். அப்போது உங்கள் கைகளை அந்த பாட்டிலின் வாய்ப் பகுதியில் இருந்து எடுக்காமல், அடைப்பு இருக்கும் உங்கள் சமையலறை சிங்கிற்கு அந்த பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துச் சென்று, அந்த பாட்டிலின் வாய்ப் பகுதியில் இருந்து கையை அகற்றி, சிங்கின் துவாரத்தில் பாட்டிலுக்குள் இருக்கின்ற திரவத்தை மிக வேகமாக ஊற்ற வேண்டும்.
இப்படி வேகமாக அந்த திரவத்தை ஊற்றும் போது சிங்கிற்குள் இருக்கின்ற அடைப்புகள் நீங்கி விடும். இருந்தாலும் அடைப்புகள் முழுமையாக நீங்க, ஒரு அரை பக்கெட் அளவிற்கு நன்கு கொதிக்க வைத்த சுடுதண்ணீரை மீண்டும் அந்த சிங்கிற்கு வேகமாக ஊற்றும் பொழுது, எப்படிப்பட்ட அடைப்புகளும் சுத்தமாக நீங்கி விடும். வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்வதால் கிச்சன் சிங்க் குழாய்களில் நிரந்தர அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
சமையலறை சிங்குகளில் அடைப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிங்குகளில் தட்டுகள், பாத்திரங்கள் கழுவும் பாத்திரங்களில் இருக்கின்ற திட உணவு கழிவுகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு பிறகு சிங்குகளில் பாத்திரங்களை கழுவ வேண்டும். மேலும் காய்கறி பழங்களின் தோல் கழிவுகள், சக்கைகள் பயன்படுத்தப்பட்ட டீத்தூள், மீதமான சட்னி, குழம்பு போன்றவற்றை சமையலறை சிங்கில் கொட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் சிங்குகளில் அடிக்கடி பெரிய அளவில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும்.