இந்தக் கிழமைகளில் இதை செய்தால் மிகவும் நல்லது என்று ஆன்மீகம் கூறும் ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

week-vinayagar
- Advertisement -

காலமும் நேரமும் செய்யாததை வேறு எதுவும் நமக்கு செய்து விடாது என்பது ஆன்மீக பழமொழி. அந்த அளவிற்கு நேரத்திற்கும், காலத்திற்கும் நம்முடைய சாஸ்திரத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தை நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். நேரம் பார்க்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் யாரும் செய்வதில்லை. அப்படித்தான் கிழமையும் அமைந்துள்ளது. இந்தக் கிழமையில் இதை செய்தால் மிகவும் நல்லது என்று ஆன்மிகம் கூறுகிறது. அப்படி எந்த கிழமையில் எதை செய்ய வேண்டும்? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

sunday

முதலில் ஞாயிற்றுக்கிழமையை எடுத்துக் கொண்டால் அன்றைய நாளில் கோவில் காரியங்கள் செய்வதற்கு இந்த நாளை பயன்படுத்தலாம். அரசாங்க கடிதங்கள், பெற்றோர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை மேற்கொள்வது, திருமண முயற்சிகள் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்ததாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை இந்த நாளில் வாங்க கூடாது.

- Advertisement -

திங்கள் கிழமையை எடுத்துக் கொண்டால் அன்றைய நாளில் வீடு, மனை போன்றவை, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்குவதற்கு உகந்தது அல்ல. தங்கம், வெள்ளி போன்ற நகை வகைகளை வாங்கலாம். தாய்க்கு உதவிகள் செய்யலாம். எந்த விஷயத்தைப் பற்றியும் யோசிக்க நல்ல நாளாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக இந்த நாள் அமையும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

monday

செவ்வாய்க்கிழமையை எடுத்துக் கொண்டால் அன்றைய நாளில் வீடு கட்டுவதற்குரிய திட்டங்கள், மனை பார்க்க செல்வது போன்ற விஷயங்களை செய்யலாம். நல்ல விஷயங்களை செய்யாவிட்டாலும், இந்த நாளில் மருந்து மாத்திரைகள், இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள், தொழில் உபகரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு மிகவும் உகந்த நாளாக இருக்குமாம்.

- Advertisement -

புதன் கிழமையை எடுத்துக் கொண்டால் அன்றைய நாளில் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி தரும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அந்த அளவிற்கு புதன்கிழமை மிகச் சிறந்த நாளாக சாஸ்திரம் கூறுகிறது. நவீன பொருட்கள், அறிவு சார்ந்த பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை இந்த நாளில் தாராளமாக வாங்கலாம். எந்த ஒரு முடிவையும் இந்த நாளில் எடுத்தால் சாதகமாக அமையும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

thursday

வியாழன் கிழமை எடுத்துக் கொண்டால் அன்றைய நாளில் புதிய பயிற்சிகளையும், புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்வதற்கு சிறந்த நாளாக இருக்கும். குரு பகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் கலைகள் பயில மிக உகந்த நாள் வியாழன் தான். ஜாதகம் பார்ப்பது, தியானம் செய்வது, ஆலய தரிசனம் மேற்கொள்வதற்கு இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

friday

வெள்ளிக்கிழமை எடுத்துக் கொண்டால் சொல்லவே தேவையில்லை. மிகவும் மங்களகரமான நாளாக அமைந்து இருப்பதால் மங்கல நிகழ்வுகள் குறித்த விஷயங்களை மேற்கொள்வது சிறந்தது. கடன், வாகனம், விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் போன்றவற்றை வாங்குவது, கோவிலுக்கு செல்வது, வங்கி கணக்கு துவங்குவது, பணம் சேர்ப்பது போன்றவை செய்ய மிகவும் உகந்த நாளாக இருக்கும். இன்றைய நாளில் பணத்தை வீணாக செலவு செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.

saturday

சனிக்கிழமை எடுத்துக் கொண்டால் அன்றைய நாளில் மருத்துவம், விவசாயம் சார்ந்த விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்க மிகவும் உகந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள், வழக்குகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் பெற இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த ஒரு செயலையும் சரியான நேரத்தில் செய்ய முடியாத சூழ்நிலையில் பிள்ளையாரை வணங்கி விட்டு செய்வது நல்லது.

இதையும் படிக்கலாமே
எக்காரணத்தைக் கொண்டும், வீட்டின் சமையல் அறையில், பெண்கள் இந்த ஒரு தவறை மட்டும் இனி செய்யவே செய்யாதீர்கள். இந்த சின்ன தவறு, வீட்டின் ஐஸ்வர்யத்தையே குறைத்துவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -