India national cricket team : நான் மீண்டும் சிறப்பாக ஆட காரணம் ராகுல் டிராவிட் தான் – கே.எல் ராகுல் நெகிழ்ச்சி

Rahul
- Advertisement -

கடந்த சில வாரத்திற்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிபடுத்தும் வகையில் பேசியதால் இந்திய அணியில் இருந்து ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் சில போட்டிகளில் நீக்கப்பட்டனர். பிறகு பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். ராகுல் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வந்தார்.

rahul-pand

பிறகு மீண்டும் ராகுலுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரேயான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை நன்றாக பயன்படுத்தி ஆடிய ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 50 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 47 ரன்களும் எடுத்து மீண்டும் தனது அதிரடியான பேட்டிங் திறமையினை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து பேட்டி அளித்த ராகுல் : நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட காலம் மிக கடினமாகவும், வேதனையாகவும் இருந்தது. அந்த நீக்கத்தின் மூலமாக நான் என்னை முழுமையாக புறிந்து கொண்டேன். அனைத்து இளைஞர்களுக்கும் இந்திய தேசிய அணியில் ஆடவேண்டும் என்ற கனவு இருக்கு. ஆனால், அணியில் இடம் பிடித்து ஆடிவந்த நான் செய்த செயல் தவறு என்று புரிந்து கொண்டேன். மேலும், இந்திய தேசிய அணியில் இடம் பிடித்திருக்கும் வீரராக நான் இருப்பதால் மற்றவருக்கு ஒரு நல்ல முன்மாதிரியாகவும், ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்று புரிந்து கொண்டேன் இதற்கு முழுக்காரணம் ராகுல் டிராவிட் தான் .

rahul

ஆம், அணியில் இருந்து நீக்கப்பட்ட நான் இந்தியா ஏ அணிக்காக 5 போட்டிகளில் விளையாடினேன். அப்போது டிராவிட்யிடம் பேச நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அவர் ஒரு வீரராக போட்டியில் என்னை முன்னேற்றி கொள்ளவும். சமூகத்தில் ஒரு நல்ல மனிதராக எவ்வாறு இருக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அவரின் பேச்சு எனக்கு மீண்டும் என் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வரவைத்து அதன் காரணமாகவே தற்போது என்னால் சிறப்பாக ஆடமுடிகிறது என்று ராகுல் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

IND vs AUS : பந்தை தவறவிட்டு அடிவயிற்றில் அடிவாங்கி வலியால் துடித்த தவான் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -