கோடீஸ்வரராக வேண்டுமா? லட்சாதிபதியாக வேண்டுமா? பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பூஜையை 48 நாட்கள் செய்தாலே போதுமே!

komatha-tm

கோடீஸ்வரராக, லட்சாதிபதியாக வெறும் 48 நாட்கள் போதுமா! என்ற சந்தேகம், நாம் எல்லோர் மனதிலும் எழும். சந்தேகமே வேண்டாம்! நிச்சயம் பணக்காரர் ஆகலாம். நாம், எதை, தொடர்ந்து 48 நாட்கள் நினைத்து, பூஜை செய்கிறோமோ அந்த பூஜைக்கு கைமேல் பலன் கிடைக்கும். உங்களது பூஜை முழு நம்பிக்கையோடு இருந்தால் மட்டும். என்ன பூஜை செய்யப்போகிறோம் என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ளலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நம் வீட்டில் நாம் செய்யப்போகின்ற அந்த பூஜை ‘கோ பூஜை’ தான். கோ பூஜையை எப்படி முறையாக செய்யவேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

komatha

இந்தப் பூஜைக்கு கட்டாயம் உங்கள் வீட்டில் கோமாதாவின் சிலை கன்றோடு இருக்கவேண்டும். அந்த சிலை எந்த உலோகத்தில் இருந்தாலும் பரவாயில்லை. சில பேர் வீடுகளில் அழகிற்காக கண்ணாடியிலோ அல்லது பீங்கானிலோ வாங்கி வைத்திருப்பார்கள். அந்த சிலையாக இருந்தாலும் பரவாயில்லை. எதுவுமே இல்லாத பட்சத்தில், கோமாதா படம் இருந்தாலும் சரி. அதை வைத்து இந்த பூஜையை செய்து கொள்ளலாம். முடிந்தவரை சிலையை வைத்து பூஜை செய்வது உத்தமம்.

இந்தப் பூஜையை கட்டாயம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். முடிந்தவரை சூரிய உதயத்திற்கு முன்பாக பூஜை முழுவதையும் செய்து முடித்துவிடுங்கள். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, கோமாதாவின் சிலைக்கும் முதலில் பாலபிஷேகம் செய்து, அதன்பின்பு குங்குமப் பொட்டு வைத்து, பூவினால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

komatha-1

கட்டாயம் கோ பூஜைக்கு 2 அகல் தீபங்கள், நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். கோமாதாவின் சிலைக்கு முன்பாக வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ சேர்ந்த தாம்பூலம் கட்டாயம் தேவை. அதன்பின்பு உங்களால் முடிந்தால் அகத்திக் கீரையும், அறுகம்புல்லும் வைத்து பூஜை செய்யலாம். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கோமாதா விற்கு முன்பாக படைத்துவிட்டு, தீபங்களை ஏற்றி வைத்து, தூப ஆராதனையை முடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜையானது முழுமையாக நிறைவடைந்த பின்பு, நீங்கள் வைத்திருக்கும் கோமாதாவின் உருவச் சிலையை பார்த்து, உங்கள் மனதில் வைத்திருக்கும் கோரிக்கையை 11 முறை உச்சரிக்க வேண்டும். எந்த கோரிக்கையாக இருந்தாலும் சரி. அதிகபடியான பணத்தேவை இருந்தாலும் சரி. கடன் சுமை தீர வேண்டும் என்றாலும் சரி. உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டுமென்றாலும், குழந்தைப்பேறு வேண்டும் என்றாலும், இந்த பூஜையை தொடர்ந்து செய்யலாம். பூஜையை நல்லபடியாக முடித்துவிட்டு, சூரியபகவான் உதய மானதும், நீங்கள் பூஜைக்காக வைத்திருந்த அகத்திக் கீரையும், அறுகம்புல்லையும் பசுமாட்டிற்கு சாப்பிட கொடுப்பது மிகவும் நல்லது.

thambulam

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய பொருளாதார சூழ்நிலை மிகவும் பின்னடைந்து விட்டது. அதை சரி செய்வதற்கு இந்த கோபூஜை அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் கோமாதாவின் உடலில், முப்பத்து முக்கோடி தேவர்களும் குடிகொண்டுள்ள விஷயம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்.  மகா லட்சுமி வாசம் செய்யும் கோ மாதாவை, வீட்டில் வைத்து பூஜை செய்வது என்பது மிகவும் புனிதமான காரியம்.

அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த வேளையில் பாலபிஷேகம் செய்து, எவரொருவர் இந்த பூஜையை, இந்த முறைப்படி செய்து வருகிறாரோ அவருடைய வாழ்க்கையில் தோல்வி கட்டாயம் குறிப்பிடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தோல்வி இல்லை என்றால், கூடிய விரைவில் பணக்காரர் ஆகி விடலாம் அல்லவா?

இதையும் படிக்கலாமே
காற்றில் கலந்துள்ள கெட்ட சக்தி கூட உங்கள் வீட்டு வாசலில் நுழையாது. இந்த 3 பொருளை மஞ்சள் துணியில் கட்டி வைத்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have gomatha pooja. ko pooja benefits. ko pooja benefits in tamil. ko pooja in tamil