ஜோதிடம் : உங்கள் ஜாதகத்தில் இது மட்டும் இருந்தால் சிறப்பான பலன் நிச்சயம்

money

பணம் அல்லது செல்வம் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கிறது. ஜோதிடர்களிடம் சென்று தங்கள் ஜாதகத்தை காண்பித்து பலன் கேட்கும் பெரும்பான்மையான மக்கள் கேட்கும் கேள்வி தங்களுக்கு எப்போது மிகுந்த செல்வம் ஈட்டக்கூடிய நேரம் வரும் என்பது தான். ஏதாவது ஒரு வேலை அல்லது தொழில் செய்து அனைவரும் பணம் சம்பாதிக்கவே செய்கின்றனர். ஆனாலும் மிகப் பெரும் லட்சாதிபதி, கோடீஸ்வரர் ஆவதற்கு நமது ஜாதகத்தில் சில கிரக அமைப்புகள் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனக் கூறப்படுகிறது. அந்த அமைப்புகள் என்ன? நமக்கு அத்தகைய ஜாதக அமைப்பு இருந்தால் என்ன பலன் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு கிரகத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய வீடுகளிலும் அல்லது குருவிற்கு 1, 5, 9 இடங்களில் கேது பகவான் இருப்பதும், குரு கிரகம் நின்ற ராசியிலிருந்து குரூ பகவானின் சுபிட்ச பார்வை படும் 5, 7, 9 ஆம் வீடுகளில் கேது இருப்பதும் மிக பெரும் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை ஒருவருக்கு கொடுக்கும். அந்த ஜாதகருக்கு ஒரு நாட்டையே வாங்கும் அளவிற்கு பெருமளவிலான செல்வம் சேரும். தொழில், வியாபாரங்களில் மற்ற போட்டியாளர்கள் இந்த ஜாதக அமைப்புள்ள நபரை சுலபத்தில் வெற்றி கொள்ள முடியாத நிலை இருக்கும்.

ஜாதகத்தில் குரு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் கெடாமலும், குரு, கேது கிரகங்கள் இணைந்து ஜாதக கேந்திர வீடுகள் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய வீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகள் எனப்படும் 1, 5, 9 ஆகிய வீடுகளிலோ இணைந்து நின்றால் அந்த ஜாதகர் தன் சுய புத்தி மற்றும் கடின உழைப்பால் மிகப் பெரும் கோடீஸ்வரனாவார். ஜாதகர் தொட்டதெல்லாம் பொன்னாகும். செல்வ வரவிற்கு குறையேதும் இருக்காது.

guru

ஒருவரின் ஜாதகத்தில் குரு, கேது இணைந்தாலோ, கேதுவுக்கு குரு பார்வை ஏற்பட்டாலோ, அந்த ஜாதகருக்கு குரு திசை அல்லது கேது திசை ஏற்படும் போது மிக சாதாரணமான நிலையில் இருக்கும் அந்த ஜாதகர் திடீர் யோகம் ஏற்பட்டு, பொருளாதாரத்தில் எதிர்பாராத உச்ச நிலையை அடைந்து பெரும் கோடீஸ்வரர் ஆக்கி சமுதாயத்தில் புகழையும் கொடுக்கும்.

- Advertisement -

Astrology ketu

அதே போன்று ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8,12 வீடுகள் ஏதேனும் ஒன்றில் குரு இருந்து, கேது கிரகமும் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய மறை விடங்கள் ஏதேனும் ஒன்றில் இருந்து, அந்த கேது கிரகம் குரு பார்வை பெற்றால் அவ்வளவு சிறப்பான பலன்களை தராது.

இதையும் படிக்கலாமே:
12 ராசிகள் ஒவ்வொன்றிலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kodeeswara yogam in Tamil. It is also called as Jathagam in Tamil or Jothida yogam in Tamil or Guru kethu yoga in Tamil or Kodeeswaran aaga in Tamil.