ஜோதிடம் : 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் பலன்கள் இதோ

நவகிரகங்களில் செவ்வாய் கிரகமும் ஒரு முக்கியமான கிரகமாகும்.12 ராசிகள் ஒவ்வொன்றிலும்செவ்வாய் இருப்பதால் ஏற்படும் பலன்கள் இதோ

sevvai

நவகிரகங்களில் மூன்றாவதாக வரும் கிரகம் செவ்வாய் கிரகமாகும். ரத்தம், போர், உடலின் வீரிய தன்மை, சகோதர உறவு, பூமி போன்றவற்றிற்கு காரகனாக இந்த செவ்வாய் பகவான் இருக்கிறார். ஜாதகத்தில் மற்ற எந்த கிரகத்தையும் போலவே செவ்வாய் கிரகமும் நன்மை மற்றும் தீமையான பலன்களை தருவதாக இருக்கிறது. இங்கு 12 ராசிகளில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசியில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு உடல் பலமும் மனோபலமும் அதிகம் இருக்கும். போர்க் குணம் கொண்டவராக இருப்பார்கள். ராணுவம் காவல்துறை போன்ற துறைகளில் வீர சாகசங்கள் செய்து பெரும் புகழ் ஈட்டுவார்கள். அதிக அளவு பொருளீட்டுவார்கள். பூமி லாபம் உண்டாகும்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசியில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உடல் பலமும் மிகவும் குறைவாக இருக்கும். இவர்களின் வாழ்க்கை இன்ப, துன்பங்கள் கலந்தது போல் இருக்கும். இவர்களுக்கு செல்வம் மிகக் குறைவான அளவிலேயே சேரும். தவறான காரியங்களில் ஈடுபட்டு துன்புறுவார்கள்.

மிதுனம்:

midhunam

மிதுன ராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் நல்ல உடல் அழகை பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மனோதிடம் அதிகம் இருக்கும். நன்றி உணர்ச்சி அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வமும், கலைஞானமும் இருக்கும். எதற்கும் சுலபத்தில் பயப்பட மாட்டார்கள். ராணுவம் காவல் துறை போன்றவற்றில் உயர்ந்த பதவிகளைப் பெறுவார்கள்.

கடகம்:

Kadagam Rasi

கடகத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு நல்ல லாபங்களை ஈட்டுவார்கள். எனினும் இவர்கள் வசிப்பதற்கு சொந்த வீடு அமைவது மிகவும் தாமதமாகும். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டு சரியாகும். நல்ல நண்பர்கள் அதிகம் இவர்களுக்கு இருக்க மாட்டார்கள். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகளை பெறுவார்கள்.

சிம்மம்:

simmam

செவ்வாய் சிம்மத்தில் இருக்கப் பிறந்தவர்கள் மிகுந்த பராக்கிரமசாலியாக இருப்பார்கள். எதிரிகள் இவரைக் கண்டால் அஞ்சி நடுங்கும் நிலை இருக்கும். தங்களின் கடின உழைப்பின் மூலம் செல்வத்தை ஈட்டுவார்கள். குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமானதாக இருக்காது. இவர்களிடம் கம்பீர தன்மை இருக்கும். வீர சாகசங்கள் ஈடுபாடு அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

கன்னி:

Kanni Rasi

செவ்வாய் கன்னியில் இருக்கப் பிறந்தவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். உயர் கல்விகள் பலவற்றைக் கற்று தேறுவார்கள். இசையில் ஆர்வம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். ஆன்மீக விட யங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். பிறரை மகிழ்விக்கும் வகையில் இனிமையான பேச்சை கொண்டவர்களாக இருப்பார்கள். அளவான செல்வம் திரட்டுவார்கள்.

துலாம்:

Thulam Rasi

செவ்வாய் துலாம் ராசியில் இருக்கப் பிறந்தவர்கள் அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே நேரம் கடுமையாக பேசக் கூடியவர்களாக இருக்கக்கூடும். இவர்களுக்கு போதைப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். இன்பங்களை அனுபவிப்பதற்காக செலவு செய்ய தயங்க மாட்டார்கள். அடிக்கடி சண்டை சச்சரவுகள் சிக்கி துன்புறுவார்கள்.

விருச்சிகம்:

virichigam

விருச்சிக ராசியில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் ஒரு குழுவுக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு தலைமை தாங்க கூடியவர்களாக இருப்பார்கள். நேர்மை குணம் அதிகம் இருக்கும். அரசாங்க அதிகாரியாக பணி செய்யக்கூடிய யோகம் உள்ளவர்கள். ஒரு சிலர் பாவச் செயல்களை துணிந்து செய்வார்கள். எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசியில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் அடிக்கடி உடலில் காயம் படுவார்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். சண்டை பிரியர்களாக இருப்பார்கள். அதன் காரணமாக இவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் அதிகம் இருப்பர். அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய பதவிகளை வகிப்பார்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதால் செல்வத்தையும், புகழையும் இழக்கக் கூடிய நிலை சிலருக்கு உருவாகும்.

மகரம்:

Magaram rasi

செவ்வாய் மகரத்தில் இருக்க பிறந்த ஜாதகர்கள் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள். அரசாங்கத்தால் மதிக்கப்பெறும் நிலை இவர்களுக்கு ஏற்படும். அழகான புத்திர பாக்கியம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்துபவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி, புகழ், செல்வம் எல்லாம் இவர்களுக்கு காலாகாலத்தில் வந்து சேரும்.

கும்பம்:

Kumbam Rasi

செவ்வாய் கும்பத்தில் இருக்கப் பிறந்தவர்கள் தோற்றப்பொலிவு குறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு செல்வமும் அதிகம் இருக்காது. வீணான கவலைகள் இவர்களுக்கு ஏற்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் அதிக அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். போதைப்பழக்கம், சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு செல்வத்தை இழப்பார்கள்.

மீனம்:

meenam

மீனத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். பல விடயங்களை கற்றுத் தேர்ந்த பண்டிதர்களாக இருப்பார்கள். செயல்களில் வேகம் இருக்கும். வெளிநாட்டு தொடர்புகளால் செல்வம் ஈட்டுவார்கள். அரசாங்கம் மற்றும் பெரும் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் இவர்களுக்கு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் ராஜயோகம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi sevvai palangal in Tamil. It is also called as 12 rasigal in Tamil or Jathagathil sevvai in Tamil or Sevvai graham palangal in Tamil.