- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடீஸ்வர யோகம் தரும் பங்குனி வெள்ளி வழிபாடு

கோடீஸ்வர யோகம் தரும் பங்குனி வெள்ளி வழிபாடு

- Advertisement -

வசந்த மாதமாக திகழக்கூடியது தான் பங்குனி மாதம். இந்த பங்குனி மாதத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டின் பலனை முழுமையாக நம்மால் பெற முடியும். அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. அதிலும் பங்குனி வெள்ளிக்கிழமை என்பது இன்னும் கூடுதல் பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பங்குனி வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயத்தில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பங்குனி வெள்ளி வழிபாடு

பெண் தெய்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களை தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தோம் என்றால் அவர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தரித்திரமும் நீங்கி செல்வ வளத்துடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு பெண் தெய்வமாக இருக்கக்கூடிய மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். மகாலட்சுமி மட்டும் செல்வத்தை தருவாளா? கிடையாது பார்வதி தேவியும் சரஸ்வதி தேவியும் நமக்கு செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர்கள் தான். பார்வதி தேவி வீரம் என்ற செல்வத்தையும், சரஸ்வதி தேவி கல்வி என்ற செல்வத்தையும் வாரி வழங்குவார்கள். அதனால் வெள்ளிக்கிழமை மறவாமல் பெண் தெய்வ வழிபாட்டை நாம் செய்ய வேண்டும்.

- Advertisement -

பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பது மார்ச் மாதம் 21ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருகில் இருக்கக்கூடிய பெண் தெய்வ கோவிலுக்கு செல்லலாம். அது அம்மன் கோவிலாக இருந்தாலும் சரி, மகாலட்சுமி கோவிலாக இருந்தாலும் சரி, மாரியம்மன் கோவிலாக இருந்தாலும் சரி. அருகில் எந்த பெண் தெய்வத்தின் கோவில் இருந்தாலும் சென்று விடுங்கள். அவ்வாறு செல்லும் பொழுது கையில் மூன்று எலுமிச்சம் பழம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வாங்கிக்கொண்டு செல்லுங்கள் இதோடு அம்மனுக்கு மலர்களையும் வாங்கிக்கொண்டு போகலாம். அதுவும் வாசனை மிகுந்த மல்லிகை, முல்லை போன்ற மலர்களை வாங்கித் தருவது இன்னும் கூடுதல் பலனை தரும்.

இவை அனைத்தையும் வாங்கிக்கொண்டு அம்மன ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய ஐயரிடம் இவை அனைத்தையும் கொடுக்க வேண்டும். எலுமிச்சம் பழத்தை அம்மனின் பாதத்தில் வைக்க சொல்லி தர வேண்டும். பிறகு உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி கோடீஸ்வர யோகம் உண்டாக வேண்டும் என்று மனதார வழிபாடு செய்துவிட்டு அம்மனை தங்களால் இயன்ற முறை வலம் வர வேண்டும். வலம் வந்து முடித்த பிறகு அம்மனின் பாதத்தில் இருக்கும் எலுமிச்சம் பழத்திலிருந்து ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து இனிப்பு அல்லது உப்பு கலந்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பருக வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்குவதோடு கோடீஸ்வர யோகம் பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:அடகு வைத்த நகைகளை திருப்ப குண்டு மஞ்சள் பரிகாரம்
பெண் தெய்வத்திற்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்று இந்த முறையில் எலுமிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் பெண் தெய்வத்தின் அருள் கிடைக்க பெறுவதோடு நல்ல கோடீஸ்வர யோகமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்