சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றால் நமக்கு அதற்கான யோகம் கைக்கூடி வரவேண்டும். கூடவே சேர்ந்து பணம் காசும் நமக்கு சேர வேண்டும். யோகமும் பணமும் ஒருசேர கிடைக்கும் போதுதான் சொந்த வீடு கட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கும். அந்த வகையில் ஆடி ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய சிவன் வழிபாட்டை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ஆடி ஞாயிறு என்றால் அம்மன் கோவிலுக்கு தானே போக வேண்டும். என்ன சிவன் கோவிலில் சென்று மந்திரம் சொல்ல சொல்றீங்க. அப்படின்னு சிந்திக்கலாம். அடி ஞாயிறு அம்பாளுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. எல்லா தெய்வங்களுக்கும் சொந்தமானதுதான். அந்த வகையில், வரும் ஆடி ஞாயிற்றுக்கிழமை இந்த வழிபாட்டை சிவன் கோவிலில் போய் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
ஆடி ஞாயிறு சிவன் வழிபாடு
கொஞ்சமாக கற்கண்டு, 1 கிலோ பச்சரிசி வாங்கிக் கொண்டு போய் சிவன் கோவிலில் தானம் கொடுக்க வேண்டும். சிவன் கோவிலில் சில இடங்களில் மடம் இருக்கும். அந்த மடத்திற்கு இந்த இரண்டு பொருளையும் தானமாக கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் தினமும் சிவனுக்கு பிரசாதம் செய்வார்கள் அல்லவா.
குருக்களிடம் அதற்காக இந்த பச்சரிசியையும் கற்கண்டையும் தானம் கொடுங்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு பொருளை தொடர்ந்து சிவன் கோவிலுக்கு தானம் கொடுத்து வரும்போது உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். அதிலும் இந்த ஆடி ஞாயிற்றுக்கிழமையில் இந்த தானம் செய்வது மிக மிக சிறப்பு.
சிவனை நாம் அடைய வேண்டும். சிவனது அருளாசி நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வழி மந்திர ஜெபம். தியான நிலையில் சிவன் கோவிலில் அமர்ந்து கண்களை மூடி மந்திரத்தை சொன்னால் வேண்டிய வரத்தை சிவபெருமானிடம் சுலபமாக பெற்றுவிடலாம். சிவபெருமானை வசியம் செய்து தன ஆகர்ஷணத்தைப் பெற என்ன மந்திரத்தை சொல்லுவது.
கோடீஸ்வர யோகம் தரும் சிவ மந்திரம்
சிவ சிவ வசி வசி
கோடிஸ்வர யோகம் தர
வர வர ஸ்வாகா
இந்த மந்திரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் சொல்லலாம். இந்த மந்திரம் உங்களுக்கு சித்தி ஆக ஆக உங்களுக்கு வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நிச்சயமாக ஒரு நாள் நீங்கள் கோடீஸ்வர யோகத்தை அடைவீர்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் அமர்ந்து கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி, கண் முன்னே சிவலிங்கத்தை கொண்டு வந்து, 108 முறை இந்த மந்திரத்தை சொன்னீர்கள் என்றால் நீங்கள் நினைத்தது கூடிய சீக்கிரம் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: கஜலட்சுமி யோகத்தால் கல்லா கட்ட பரிகாரம்
உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறையும். பண பிரச்சனைகள் தீரும் வருமானம் அதிகரிக்க தொடங்கிவிடும். தொடர்ந்து ஒரு ஐந்து ஞாயிற்றுக்கிழமை இதை பின்பற்றினாலே வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்கள் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.