உங்க கையில இந்த ரேகை இருக்குதான்னு பாருங்க! இன்றைக்கு இல்லை என்றாலும், என்றைக்காவது நீங்கள் கோடீஸ்வரராக போவது உறுதி!

Regai

நமது உள்ளங்கைகளில் இருக்கும் கிறுக்கல்கள் தான் நம்முடைய தலையெழுத்தை தீர்மானம் செய்கிறது. அந்த ஆண்டவன் நம்முடைய கைகளில் வரைந்து வைத்திருக்கும் கைரேகை தான் அது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ரேகைகள் உங்கள் கையில் இப்படி இருந்தால், நிச்சயம் நீங்கள் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. அதுவே, உங்கள் கைரேகை, இப்படி இருந்தால், உங்களுக்கு கஷ்டம் ஏற்படுவதையும் யாராலும் தடுக்க முடியாது.  உங்களுடைய உள்ளங்கைகளில் கைரேகை எப்படி இருக்கிறது என்பதை வைத்து, சோதித்து பார்த்து விடலாமா?

kai regai

முதலாவதாக உங்களது கைகளில் சூரிய ரேகை இருக்கின்றதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் sun line என்று சொல்லுவார்கள். இந்த ரேகை உங்களது மோதிர விரலுக்கு கீழ் பக்கத்தில் இருக்க வேண்டும். இந்த ரேகை இருந்தால் நீங்கள் நிச்சயமாக புகழின் உச்சியில் இருப்பீர்கள். சில பேருக்கு இந்த ரேகையே இருக்காது. இப்படி இருக்கும் பட்சத்தில், உங்களது வாழ்க்கை சுமாராகத்தான் செல்லும். இதற்காக விரக்தி அடைந்து விட வேண்டாம். கடுமையாக கஷ்டப்பட்டால் எந்த பிரச்சனையில் இருந்தும் விடுபட்டு, சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

சிலபேருக்கு மோதிர விரலின் கீழ்ப்பாக்கத்தில் அமைந்திருக்கக் கூடிய இந்த சிறிய கோடானது, வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை தேடி தரும் கோடாக அமையும். இன்றைக்கு நீங்கள் வாழ்க்கையில் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தாலும், நிச்சயம் கோடீஸ்வர யோகத்தை நீங்கள் என்றாவது அடைந்தே தீருவார்கள் என்பதற்கான அர்த்தம் தான் இது.

Sooriya Regai

இதேபோல், எவரொருவர் கையிலிருக்கும் ரேகைகளின் கோடுகள் முக்கோணம் வடிவில் அமைந்து இருந்தால், அவர் அதிர்ஷ்டம் மிக்கவர் என்பதை குறிக்கின்றது. இவர்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டமே இவர்களை பணக்காரராகி விட்டுவிடும். இவர்கள் ஏதோ ஒன்று செய்ய, அது தவறாகவே இருந்தாலும், இவர்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டம் அதை லாபகரமாக மாற்றி தந்துவிடும். சிலபேருக்கு கை ரேகைகளின் மேலேயும், விரல்களின் நடுவேயும் சின்ன சின்ன புள்ளிகள் காணப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் அது அபசகுனமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

regai-3

ஒருவரது கையில் இருக்கும் சனி மேடும், வீனஸ் மேடும் சற்று அதிகமாக மேலெழுந்து காணப்பட்டால், எடுத்த காரியத்தில் முதல் மார்க்கத்திலேயே அவர்கள் வெற்றி அடைவார்கள் என்பதை குறிக்கின்றது. ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டாலும், எதிர்காலத்தில் சுகபோக வாழ்க்கையை வாழும் தகுதி இவர்களுக்கு வந்துவிடும்.

Regai

எது எப்படியாக இருந்தாலும், கடுமையாக உழைக்காமல், நேர் வழியில் செல்லாமல் இருப்பவர்களுக்கு எந்த நன்மையும் இறுதிவரை ஏற்படாது. இதேபோல், தோல்வியே இல்லாமல், உழைக்காமல், வெரும் அதிர்ஷ்டத்தின் மூலம் மட்டுமே, கண்மூடித்தனமாக எவரொருவர் புகழின் உச்சிக்கு செல்கின்றாரோ, அவரின் வாழ்க்கையும் முழுமையாக நிறைவடையாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.