- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடி கடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்

கோடி கடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்

- Advertisement -

ஒரு ரூபாயாக இருந்தாலும் கோடி ரூபாயாக இருந்தாலும் பிறரிடம் இருந்து நாம் வாங்கி விட்டோம் என்றால் அது கடனாகவே பாவிக்கப்படுகிறது. அந்த கடனை நாம் திருப்பி செலுத்த வேண்டும் என்ற ஒருவித எண்ணமும் உண்டாகும். அதை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் கடன் கொடுத்தவரால் ஏற்படக்கூடிய அவமானங்களால் மன உளைச்சல் உண்டாகி பலரும் விபரீதமான முடிவுகளை எடுத்தும் இருக்கிறார்கள். உயிரை எடுக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஒன்றாக கடன் திகழ்கிறது.

அப்படிப்பட்ட கடனை முடிந்த அளவிற்கு நாம் வாங்காமல் இருக்க வேண்டும். ஒருவேளை நவகிரகங்களின் தாக்கத்தால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி இருக்கும் பட்சத்திலோ அல்லது அந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக பலவிதங்களில் முயற்சி எடுத்தும் அந்த முயற்சியில் தோல்வி அடைந்தவர்களாக இருக்கும் பட்சத்திலோ விரைவிலேயே கடனை அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்திலோ இந்த ஐந்து ரூபாய் பரிகாரம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கோடி கடனை தீர்க்கும் பரிகாரம்

இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். தொடங்கக்கூடிய வெள்ளிக்கிழமை வளர்பிறை வெள்ளிக்கிழமையாக இருப்பது கூடுதல் சிறப்பை தரும். இதற்கு ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது கண்ணாடி கிண்ணம் வேண்டும். இதை மூன்று சரி பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். முதல் பாகத்தில் கல் உப்பை போட வேண்டும். அதற்கு மேல் இரண்டாவது பாகத்தில் வெள்ளை சர்க்கரையை போட வேண்டும். கடைசியாக மூன்றாவது பாகத்தில் பச்சரிசியை போட வேண்டும். வீட்டில் மகாலட்சுமி தாயாரின் படம் கண்டிப்பாக இருக்கும் அல்லவா? அந்த படத்திற்கு முன்பாக மூன்று வெற்றிலை இரண்டு கொட்டை பாக்கை வைத்து அதற்கு மேல் பித்தளை நிறத்தில் இருக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைக்க வேண்டும்.

வேண்டுதலை நிறைவு செய்த பிறகு அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் கண்ணாடி கிண்ணத்தில் பச்சரிசிக்குள் வைத்து விட வேண்டும். ஐந்து ரூபாய் வெளியே தெரியக்கூடாது. இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் ஐந்து ரூபாயை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து அந்த ஐந்து ரூபாய் பச்சரிசிக்குள் புதைத்து வைத்து விட வேண்டும். 26 ஆவது நாள் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை மொச்சையை வேக வைத்து சர்க்கரை பாகில் கலந்து நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

26 வாரங்கள் நிறைவடைந்து 27 வது வாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்த பச்சரிசிக்குள் வைத்திருந்த அந்த 26 ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து மஞ்சள் நிற துணியில் கட்டி நம்முடைய குலதெய்வ கோவிலுக்கு எடுத்துச் சென்று உண்டியலில் போட வேண்டும். அன்றைய தினம் குலதெய்வத்திற்கு நம்மால் இயன்ற அபிஷேகங்களையும் வஸ்திரங்களையும் வாங்கிக் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். கண்ணாடி கிண்ணத்தில் இருக்கக்கூடிய கல் உப்பு, சர்க்கரை மற்றும் பச்சரிசியை ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து அந்த நாணயத்தை குலதெய்வ உண்டியலில் சேர்ப்பதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பண தடைகள் அனைத்தும் நீங்குவதோடு கடன் பிரச்சினை தீருவதற்குரிய பண வரவும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: இன்று 12-10-2025 தேய்பிறை சஷ்டி முருகன் வழிபாடு

பண வரவு அதிகரிக்க குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும். இந்த ஐந்து ரூபாய் பரிகாரத்தை செய்வதன் மூலம் குலதெய்வ மற்றும் மகாலட்சுமியின் அருளை பெற்று கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்