- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடி பணத்தை கொட்டி தரும் பரிகாரங்கள்

கோடி பணத்தை கொட்டி தரும் பரிகாரங்கள்

- Advertisement -

வாஸ்துரீதியாக இரண்டு எளிமையான விஷயங்களைத் தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த இரண்டு விஷயங்களை யார் பின்பற்றினாலும் அந்த வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் தாண்டவாடும். பணக்கஷ்டம் இருக்காது. கடன் சுமை இருக்காது. சாப்பாட்டுக்கு கை ஏந்த வேண்டாம். திடீர் செலவுக்கு அடுத்தவர்களிடம் கடன் வாங்க வேண்டாம்.

நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு உண்டான பரிகாரம் தான் இது. நிச்சயமாக நிம்மதியும் பணமும் உங்களிடம் தங்கும், அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் என்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

தென்மேற்கு மூலை பரிகாரம்:

முதலில் தென்மேற்கு மூலை பரிகாரத்தை பார்த்து விடுவோம். ஒரு சின்ன உண்டியல் அது மண் உண்டியலாக இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. மண் உண்டியல் இல்லாத பட்சத்தில் தற்சமயம் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் உண்டியலை எடுத்து தென்மேற்கு மூலையில், குலதெய்வத்தை நினைத்து வையுங்கள்.

தினமும் அந்த உண்டியலில் 1 ரூபாய் குலதெய்வத்தை நினைத்து போட வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு தொகை போட்டாலும் தவறு கிடையாது. இது அப்படியே தினமும் தொடரட்டும்‌. பணம் சேர்ந்தவுடன் உண்டியல் நிரம்பியவுடன் இதை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் காணிக்கையாக செலுத்தி விட்டு வர வேண்டும்.

- Advertisement -

இதை செய்பவர்கள் வீட்டில் குடும்பத்தில் நிச்சயம் நிம்மதி நிலையாக தங்கும். வீட்டில் பணம் சேர தொடங்கும். எழுதி வச்சுக்கோங்க தொடர்ந்து இந்த பரிகாரத்தை ஒரு வருஷம் பின்பற்றி வந்தாலே நடக்கும் நல்ல மாற்றங்களை கண்டு நீங்களே வியந்து போவீர்கள்.

ஈசானிய மூலை பரிகாரம்:

வீட்டில் வடகிழக்கு மூலையை ஈசானிய மூலை என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த மூளையில் எப்போதும் 1 டம்ளரில் தண்ணீர் இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் சுவாமிக்கு பஞ்சபாத்திரத்தில் தண்ணீர் வைத்திருப்பீர்கள் அல்லவா அதை எடுத்து அப்படியே அந்த பூஜையறையின் வடக்கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். இதுவே போதும். வீட்டில் ஐஸ்வர்யம் நிறைவாக இருக்கும். கடன் பிரச்சனை வரவே வராது வருமானம் பெருகிக்கொண்டே செல்லும்.

- Advertisement -

அடுத்தபடியாக இன்னொரு போனஸ் பரிகாரம். நீங்கள் பிறந்த கிழமை இருக்கும். அந்த பிறந்த கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். மாதத்தில் ஒரு நாள் நீங்கள் பிறந்த கிழமையில் பூஜை அறையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்தாலும் செல்வ செழிப்பில் நீங்கள் உயர்ந்து காணப்படுவீர்கள்.

பூஜை புனஸ்காரங்கள் செய்தால்தான் குடும்பத்தில் நன்மை நடக்கும் என்ற கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டில் சாலிகிராமம், மேரு சக்கரம், சங்கு இப்படி அதிசக்தி வாய்ந்த உயிரோட்டம் உள்ள பொருட்களை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டு அதை பராமரிக்காமல் பூஜை செய்யாமல் அப்படியே போட்டு வைத்திருந்தாலும், குடும்பத்தில் கஷ்டம் வரும் பார்த்துக்கோங்க. முடிந்த வேலையில் மட்டும் தான் நாம் காலை எடுத்து வைக்க வேண்டும்.

முதல் 3 வாரம் பூஜை செய்துவிட்டு, அடுத்த மூன்று மாதத்திற்கு அந்த பொருளை கண்டுகொள்ளாமல் விட்டால் கஷ்டம் நிரந்தரமாக தங்குமென்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும். முடிந்த பூஜை புனஸ்காரங்களை எளிமையாக செய்யுங்கள் நல்லது நடக்கும், முடியவில்லையா? நிறைய சுவாமி படங்கள் இருக்கிறதா அதை எல்லாம் ஒரு நீல நிற டப்பாவில் போட்டு மூடி பத்திரப்படுத்தி வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் சுமை கரைய தூபம் போடும் முறை

உயிரோட்டம் உள்ள பொருட்கள் சிலைகள் எல்லாம் வீட்டில் நிறைய இருந்தால் உங்களால் அதற்கு முறையான பூஜை புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை என்றால், கோவில்களுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். தவறே கிடையாது. மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றினால் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்