கோடிஸ்வர யோகத்தை தேடி நாம் செல்ல வேண்டாம். அந்த கோடியும் லட்சமும் நம்மைத் தேடிவர, இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, யாருக்கும் தெரியாமல் நம் வீட்டில் வைத்துக் கொண்டாலே போதும்.

‘இவனுக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதனால்தான் திடீரென்று லட்ச லட்சமாக பணத்தை சம்பாதித்து விட்டான்’. ‘ஒரு கைப்பிடி மண்ணை தான் எடுத்தான், ஆனால் மண்ணெல்லாம் பொன்னாகி விட்டது’! என்று சிலரைப் பார்த்து நாமே நம்முடைய மனதுக்குள் முணுமுணுத்து கொள்வதுண்டு. சில சமயங்களில், சில பேருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் எதிர்பாராத நேரத்தில் வந்து யோகத்தை கொட்டித் தரும். அதன் மூலம் சிலர், திடீரென்று லட்சாதிபதியாக, கோடீஸ்வரனாக மாறி விடுவார்கள். ஆனால், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று யாருக்குமே தெரியாது.

mochai

இந்த கோடீஸ்வரர் வரிசையில், லட்சாதிபதிகளின் வரிசையில் நீங்களும் சேர வேண்டுமா? தாந்திரீக ரீதியாக ஒரு பரிகாரத்தை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய சொந்தத் தொழில் மூலமாகவோ அல்லது நீங்கள் வேலை செய்யும் வேலையின் காரணமாக அல்லது சொத்து பத்து மூலமாகவோ ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்து கொட்டும். அதிர்ஷ்டக் காற்றை உங்கள் பக்கம் வீச வைக்க இதை விட சுலபமான வேறு வழி எதுவுமில்லை.

இதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். சதுர வடிவத்தில் இருக்கும் பச்சை நிறத் துணி அல்லது வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நான்கு முனைகளிலும் கொஞ்சமாக மஞ்சளை தடவி கொள்ளுங்கள். அந்தத் துணிக்கு நடுவே மொச்சை 9, கிராம்பு 9, டைமண்ட் கற்கண்டு 9, அவ்வளவு தான். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைத்து முடிச்சு போட்டு கொள்ளுங்கள்.

kalkandu

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த முடிச்சினை கட்டி வைக்கலாம். அப்படி இல்லை என்றால், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த முடிச்சினை கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். குறிப்பாக இதை யார் கண்ணுக்கும் தெரியும் படி வைக்காதீர்கள். ஏதாவது ஒரு சுவாமி படத்திற்கு பின் பக்கமாக மறைத்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடிக்கடி இந்த பொருட்களை எடுத்த மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை எடுத்து மாற்றினாலே போதும். பழைய துணியை துவைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இதன் மூலம் நிச்சயம் நீங்கள் எதிர்பாராத ஏதாவது ஒரு அதிசய நிகழ்வு உண்டாகி, அதிர்ஷ்ட யோகம் நிச்சயம் அடிக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே கிடையாது.

krambu

இதற்காக முடிச்சை கட்டிவைத்து விட்டு, எதையுமே முயற்சி செய்யாமல் அமைதியாக வீட்டிற்குள் அமர்ந்து இருந்தால் எதுவுமே நடக்காது. நாம் கடந்து வந்த சில கசப்பான அனுபவத்தின் மூலம், கடந்த சில மாதங்களாக, நமக்கு வீட்டில் பலவிதமான பிரச்சனைகள், பலவிதமான கஷ்டங்கள் இன்றளவும் இருந்து கொண்டே தான் வருகின்றது.

vellai-mudichu

அப்படிப்பட்ட எதிர்பாராத சூழ்நிலையால் நீங்கள் எழுந்த இழப்பை ஈடுகட்டும் அளவிற்கு உங்களுக்கு வருமானம் வீடு தேடி வர வேண்டும் என்றால், விடாமுயற்சியோடு சேர்த்து நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3 நிறத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.