- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடீஸ்வர யோகம் பெற சித்ரா பௌர்ணமி சூட்சுமம்

கோடீஸ்வர யோகம் பெற சித்ரா பௌர்ணமி சூட்சுமம்

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி எந்த அளவுக்கு விசேஷமோ அதைவிட பல மடங்கு விசேஷம் நிறைந்ததாக தான் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திகழ்கிறது. திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த சித்ரா பௌர்ணமி என்பது பல தெய்வங்களுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அன்றைய தினம் திங்கட்கிழமை என்பதாலும் பௌர்ணமி என்பதாலும் சிவபெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் தான் சித்ரகுப்தரை வழிபாடு செய்வோம். மேலும் பௌர்ணமி என்பதால் அனைத்து பெண் தெய்வ வழிபாட்டையும் அன்றைய நாளில் மேற்கொள்வோம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் கோடீஸ்வர யோகம் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

சித்ரா பௌர்ணமி சூட்சுமம்

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய சித்ரா பௌர்ணமி நாள் அன்று நாம் சிறப்பு வாய்ந்த வழிபாடுகளை மேற்கொள்வோம். பலரும் அந்த மாதத்தில் நடக்கக்கூடிய திருவிழாக்களில் கலந்து கொண்டு அந்த தெய்வங்களை வழிபாடு செய்வார்கள். வழிபாட்டை செய்வதோடு சில சூட்சமமான வழிமுறைகளையும் நாம் பின்பற்றினோம் என்றால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதோடு கோடீஸ்வர யோகத்தையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

முதலில் மே மாதம் 12ஆம் தேதி காலையில் எழுந்தவுடன் குளிக்க கூடிய முறையை பற்றி தெரிந்து கொள்வோம். அன்றைய தினத்தில் கடலில் நீராடுவது என்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை அருகில் கடல் இல்லை என்னும் பட்சத்தில் ஆறுகளில் நீராடலாம். இவை இரண்டுமே வீட்டிற்கு அருகில் இல்லை என்பவர்கள் தாங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை கலந்து குளிப்பதன் மூலம் நம்மை பிடித்த அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகும் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக அன்றைய தினத்தில் நாம் சில குறிப்பிட்ட பொருட்களை வாங்க வேண்டும். அந்த பொருட்களை வாங்கி வைத்து பூஜை செய்வதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். மேலும் காலையிலேயே எதிர்மறை ஆற்றலை விலக்கக் கூடிய குளியலை நாம் மேற்கொண்டதால் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

- Advertisement -

சித்ரா பௌர்ணமி நாள் அன்று முரம் வாங்க வேண்டும். கிராமப்புறங்களில் அரிசி பிடைப்பதற்காக உபயோகப்படுத்தக்கூடிய மூங்கிலால் செய்யப்பட்ட முரத்தை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து அதில் நவதானியங்களை பரப்பி வைப்பதன் மூலம் நவகிரகங்களின் அருளை பெற முடியும். அடுத்ததாக அன்றைய தினம் திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி என்பதால் சந்திர பகவானுக்குரிய பச்சரிசியை வாங்கி மாலை நேரத்தில் ஒரு தாம்பாள தட்டில் பரப்பி அதற்கு மேல் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து சந்திர பகவானை வழிபாடு செய்வதன் மூலம் சந்திரனின் அருளை பெற முடியும்.

மேலும் சிவபெருமானுக்குரிய வில்வ இலைகளை வாங்கி வந்து அதற்கு மேல் ஒரு தீபத்தை பிரதோஷ நேரத்தில் ஏற்றி வைத்து சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளை பெற முடியும். அடுத்ததாக அன்றைய தினம் சித்திரகுப்தரை வழிபாடு செய்வதற்கு உகந்த தினம் என்பதால் ஒரு நோட்டு மற்றும் பேனாவை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்துவிட்டு அதை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது படிக்கின்ற பிள்ளைகளுக்கு தானமாக தருவதன் மூலம் சித்திரகுப்தரின் அருளை பெற முடியும்.

- Advertisement -

பௌர்ணமி என்றதுமே பெண் தெய்வ வழிபாடுதான் நம் ஞாபகத்திற்கு வரும். அப்படிப்பட்ட பெண் தெய்வங்களுக்கு உரிய பொருளான விரலி மஞ்சளை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் பெண் தெய்வங்களின் அருளையும் வீட்டில் மங்கலங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இயன்றவர்கள் விரலி மஞ்சள் மாலையை தயார் செய்து அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் ஆலயத்தில் மகாலட்சுமிகோ அல்லது அம்மனின் ஆலயத்தில் அம்மனுக்கோ சாற்றி வழிபாடு செய்வது பலவிதமான நன்மைகளை வாழ்க்கையில் உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே: வெற்றிகரமான வாழ்க்கை வாழ

சித்ரா பௌர்ணமி நாளன்று மேல் சொன்ன வழிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை நிலை நீங்குவதோடு செல்வ செழிப்புடன் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்